மேலும் அறிய

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் தேர்தல் களம்: அதிரடி வியூகத்தால் கைகோர்த்த அதிமுக - பாமக!

"காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகிய இரண்டு தொகுதிகளும் கைப்பற்றும் வகையில், அதிமுக கூட்டணி வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது" 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம் தொகுதியைப் பொறுத்தவரை திமுக சார்பில் நித்யா சுகுமாரும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரமும் நேரடியாக மோதுகின்றனர். இவர்களுடன் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.வீ. இரஞ்சித்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றிச்செல்வி ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

அதேபோல், அண்டை தொகுதியான உத்திரமேரூரில் திமுக சார்பில் சுந்தர் களம் காண்கிறார். அதிமுக கூட்டணியில் இந்தத் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு மகேஷ் குமார் போட்டியிடுகிறார். தமிழக வெற்றி கழகம் சார்பில் முனிரத்தினம் மற்றும் நாம் தமிழர் சார்பில் மரம் மாசிலாமணி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்டணிப் பங்கீட்டில் எழுந்த ஆரம்பகால சலசலப்புகள்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமகவின் மகேஷ் குமார் போட்டியிட்டார். அப்போது அவர் தோல்வியைத் தழுவியிருந்தாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றிருந்தார். மறுபுறம், உத்திரமேரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம், வெறும் இரண்டாயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் மிகக் குறுகிய இடைவெளியில் வெற்றியைத் தவறவிட்டார். 

இதன் காரணமாக, இந்த முறை உத்திரமேரூர் தொகுதியில் அதிமுக நேரடியாகப் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளைத் தொடங்கி வந்தனர். ஆனால், தொகுதிப் பங்கீட்டின் போது உத்திரமேரூர் பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட செய்தி வெளியானதும், உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே ஆரம்பத்தில் பெரும் அதிருப்தியும் சலசலப்பும் ஏற்பட்டது.

அரசியல் கணக்குகளை விளக்கிய முன்னாள் அமைச்சர்

தொகுதியில் ஏற்பட்ட இந்தச் சலசலப்பை உடனடியாகச் சரிசெய்ய மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் களமிறங்கினார். உத்திரமேரூர் தொகுதியில் பாமக போட்டியிடுவதன் அவசியத்தை அவர் கட்சி நிர்வாகிகளிடம் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் பாமக தனித்துப் போட்டியிட்ட போதே மகேஷ் குமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கடந்த முறை பாமக கூட்டணியில் இருந்ததாலும், நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தீவிரமாகப் பணியாற்றியதாலும் தற்போது அவர்களின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்திருப்பதை விளக்கினார். திமுக தரப்பில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஈடுகொடுக்க பாமகவின் ஆதரவு அதிமுகவிற்கு மிக அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

சமூக வாக்கு வங்கிகளின் ஒருங்கிணைப்பும் தேர்தல் வியூகமும்

இந்தத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாகச் சமூக வாக்குகள் அமையும் என்பதை சோமசுந்தரம் தனது உரையில் தெளிவுபடுத்தினார். அதிமுக சார்பில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் காஞ்சிபுரத்தில் போட்டியிடுவதால், அங்குள்ள வன்னியர் சமுதாய மக்களின் வாக்குகளைப் பெற மகேஷ் குமாரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. 

அதேபோல், உத்திரமேரூரில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மகேஷ் குமாருக்கு, அங்கு பெரும்பான்மையாக உள்ள முதலியார் சமுதாய மக்களின் வாக்குகளைப் பெற்றுத் தர சோமசுந்தரம் உறுதியளித்தார். இவர்களோடு பாஜகவின் வாக்குகளும் இணையும் போது, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்ற கணக்கை அவர் முன்வைத்தார்.இந்தத் தெளிவான அரசியல் மற்றும் சமூக ரீதியிலான விளக்கங்கள் அதிமுக நிர்வாகிகளிடையே இருந்த அதிருப்தியைப் போக்கி, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

வேகமெடுக்கும் தேர்தல் பிரச்சாரமும் ஒருங்கிணைந்த செயல்பாடும்

முன்னாள் அமைச்சரின் இந்தச் சமரச முயற்சிக்குப் பிறகு, அதிமுக மற்றும் பாமக நிர்வாகிகள் இடையே இருந்த கசப்புணர்வுகள் நீங்கி தற்போது இருவரும் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். உத்திரமேரூர் தொகுதியின் முக்கிய முகமாக இருக்கக்கூடிய, வாலாஜாபாத் கணேசனும் கூட்டணிக்கு ஆதரவாக களப்பணியில் தொடங்கியுள்ளார். சோமசுந்தரம் மற்றும் மகேஷ் குமார் ஆகிய இருவரும் தங்களது தொகுதி எல்லைகளைக் கடந்து, கூட்டணி கட்சித் தொண்டர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ஆரம்பத்தில் தொகுதி ஒதுக்கீட்டால் சற்றே சுணக்கமடைந்து காணப்பட்ட அதிமுக கூட்டணி, தற்போது இந்தச் சரியான வியூகத்தால் புத்துயிர் பெற்றுள்ளது. இதனால் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகிய இரு தொகுதிகளிலும் மற்ற கட்சிகளுக்கு இணையாக அதிமுக - பாமக கூட்டணி தேர்தல் பணிகளில் மின்னல் வேகத்தில் முன்னேறி வருகிறது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget