Kanchipuram Election Results 2024: காஞ்சிபுரம் தொகுதியில் 5.59 லட்சம் வாக்குகள் பெற்ற திமுக - வெற்றி உறுதி!
Kanchipuram Lok Sabha Election Results 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில், திமுக - அதிமுக மற்றும் பாமக இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது.
Kanchipuram Lok Sabha Election Results 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் செல்வம் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
இவர் 5,597,18 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக சார்பில் ராஜசேகர் 3,52,723 வாக்குகளை பெற்றுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024:
நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில், கடந்த ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்ட உள்ளன. அதன்படி, காஞ்சிபுரத்தில் வெற்றி பெறப்போவது யார் என்பது அந்த தொகுதி வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர்களும் & வேட்பாளர்களும்:
ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் என, மொத்தம் 17 லட்சத்து 48 ஆயிரத்து 866 வாக்காளர்களை கொண்டுள்ளது. காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்.பியான செல்வம், அதிமுக சார்பில் ராஜசேகர், பாமக சார்பில் ஜோதி வெங்கடேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ் குமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
பதிவான வாக்குகள் விவரம்:
தேர்தல் ஆணைய தரவுகளின்படி காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் (தனி ), செய்யூர் (தனி), திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அதில் 17 லட்சத்து 48 ஆயிரத்து 866 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். ஆனால், கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில், காஞ்சிபுரம் தொகுதியில் 71.68 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகின. அதாவது ஆண் வாக்காளர்களில் 74.05 சதவிகிதம் பேரும், பெண் வாக்காளர்களில் 69.44 சதவிகிதம் பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 27.39 சதவிகிதம் பேரும் மட்டுமே வாக்களித்தனர்.
கடந்த தேர்தல் விவரம்:
- 2019ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் ஜி. செல்வம் 6,84,004 வாக்குகள் (55.27%) பெற்று வெற்றி பெற்றார்
- அதிமுக சார்பில் போட்டியிட்ட கே. மரகதம் 3,97,372 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்
- நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சிவரஞ்சினி 62 ஆயிரத்து 771 வாக்குகளை பெற்றார்.
முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்குமா?
கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலை உள்ளிட்ட அனைத்து கைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும். கைத்தறி தொழில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு சேலத்தில் உள்ளதை போன்ற, இந்திய கைத்தறி தொழில்நுட்பம் நிறுவனம் மத்திய அரசின் சார்பில் உருவாக்கப்பட வேண்டும். தங்கத்தின் விலை உயர்வால் ஜரிகை விலை உயர்ந்து வருவதால், விலையை கட்டுக்குள் வைக்க கைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.
நெசவாளர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த, மருத்துவ காப்பீடு மீண்டும் வழங்கப்பட வேண்டும். அதே போன்று மருத்துவ காப்பீட்டுக்கான தொகையும் உயர்த்தப்பட வேண்டும். செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் கட்டி முடிக்கப்பட்டு செயல்படாமல் இருப்பதால் அதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேல்மருவத்தூர் வரை சென்னை கடற்கரையில் இருந்து இயங்கும் தொடர் வண்டிகளை இயக்க வேண்டும். காஞ்சிபுரம் - செங்கல்பட்டு வரை கூடுதலாக ஒரு ரயில் தண்டவாளம் அமைக்க வேண்டும். செய்யூரில் மாம்பழ கூழ் தொழிற்சாலை கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
போன்ற கோரிக்கைகள் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன. அவற்றிற்கு புதிய எம்.பி., தீர்வு காண்பாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.