வெயிலின் வெப்பத்தை விட மோடியின் வெப்பம் கொடுமையானது: கி.வீரமணி
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து திராவிட கழக தலைவர் பிரச்சாரம்
கடும் வெயிலின் வெப்பத்தை விட மோடியின் வெப்பம் கொடுமையானது என திராவிட கழக தலைவருக்கு வீரமணி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடக் கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் ,எழிலரசன் மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கி.வீரமணி காஞ்சிபுரத்தில் பிரச்சாரம்
இதனைத் தொடர்ந்து பேசிய கி.வீரமணி , அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மண்ணில் இந்த கூட்டத்தில் பேசும்போது மிகவும் மகிழ்ச்சி உள்ளதாகவும் , பிரதமர் மோடி அவர்கள் சொல்லும் பொய்யை வைத்து பல்கலைகழகம் நடத்தலாம். அந்தளவிற்கு பாஜகவில் வேறு யாரும் இல்லை. அதனாலேயே வேறு யாரும் வராமல் மோடியே இந்தியா முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் .
மோடியின் வெப்பம் கொடுமையானது
மிக குறைவான நாள் இருந்தும் வெகு வேகமாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். அதிகளவில் வெயில் தாக்கம் இருந்தும் வயது பாராமல் பிரச்சாரத்திற்காக ஓடி வருகிறேன். கடும் வெயிலின் வெப்பத்தை விட மோடியின் வெப்பம் கொடுமையானது
திமுக ஊழலை ஒழிக்க போறேன் என்று கூறும் மோடியை பார்த்து கேட்கிறேன், தேர்தல் நிதி அதிகளவில் வாங்கியதாக உச்ச நீதிமன்றம் கூறியது, prepaid, postpaid ஊழல் ஏன பேசினார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் திராவிட கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடரும் பிரச்சாரங்கள்
தொடர்ந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முக்கிய அரசியல் கட்சியினர் பல்வேறு வழிகளில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தவிர்த்து , வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோக நிர்வாகிகள் வீடு தோறும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர் . தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இறுதி நேர பிரச்சாரத்திற்கும் அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் தொகுதி முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்ட துவங்கி உள்ளது. இதுபோக இரவு நேரங்களில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், முக்கிய அரசியல் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதான கட்சியை சார்ந்த நட்சத்திர பேச்சாளர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.