மேலும் அறிய

TN Assembly Election : வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிப்பது எப்படி.? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டு முறை இதோ...

TN Assembly Election 2026 : நாளை தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,, வாக்களிப்பது எப்படி.? வாக்குச்சாவடி அலுவர்கள் என்ன என்ன கேள்வி கேட்பார்கள் என வழிமுறைகளை பார்க்கலாம்.

நாளை சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் முடித்துள்ளது. அந்த வகையில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5 கோடியே 73 லட்சத்து 43ஆயிரத்து 291 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 2,80,30,658 ஆண் வாக்காளர்களும், 2,93,04,905 பெண் வாக்காளர்களும், 7.728 மூன்றாம் பாலின வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்களிக்க 12 அடையாள அட்டை

இந்த நிலையில் இதில் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிப்பது என்பது எப்படி? என்ற விளக்கத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதலில் இணையதளத்தின் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை ஒவ்வொருவரும் வாக்காளரும் உறுதி செய்துகொள்ள வேண்டும். இதனையடுத்து இணையதளத்தின் மூலம் வாக்குச்சாவடி எண், வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள முகவரியையும் அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் கமிஷன் சுட்டிக்காட்டியுள்ள 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை ஆவணங்களாக கொண்டு செல்லலாம். 

வாக்களிப்பது எப்படி.?

இதனையடுத்து வாக்குச்சாவடியில் வாசலில் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் ஒட்டப்பட்டு இருக்கும். அதில், வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். அதில் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்பதை உறுதி செய்த பிறகு முதலில் வாக்குச்சாவடி அலுவலரிடம் (பிஓ-1) Polling officer இடம் பெயர், வாக்காளர் அடையாள அட்டை அல்லது அடையாள ஆவணத்தை காட்ட வேண்டும். இதனையடுத்து உங்கள் பெயரை பட்டியலில் இருக்கிறதா? என்பதை பிஓ-1 பார்த்துவிட்டு, உங்கள் பெயரை சத்தமாக படிப்பார். உடனே அங்கிருக்கும் வேட்பாளர்களின் முகவர்கள் தங்களிடம் உள்ள பட்டியலில் உங்களின் பெயர் உள்ளதா என்பதை சரிபார்ப்பார்கள்.

அடுத்ததாக இருக்கும் 2-வது அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் 17ஏ என்ற பதிவேட்டில் உங்களின் கையெழுத்தை பெறுவார். பின்னர் உங்களின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைப்பார். பின்னர் வரிசை எண் கொண்ட சிலிப் ஒன்றை தருவார். அதை பெற்றுக் கொண்டு  பிஓ-3 அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் அந்த சிலிப்பை வாங்கிக் கொண்டு தன்னிடம் இருக்கும் கட்டுப்பாட்டு எந்திரத்தின் பட்டனை அழுத்துவார். வாக்குப்பதிவு செய்வதற்காக மறைவாக அமைக்கப்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கு நீங்கள் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு எதிரே இருக்கும் நீலவண்ண பட்டனை அழுத்தி தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

யாருக்கு வக்களித்தோம்.?

அப்போது  நீண்ட பீப் சத்தம் கேட்கும். அப்படியானால் உங்கள் வாக்கு பதிவாகிவிட்டது என்று அர்த்தம். உடனே அருகில் இருக்கும் விவிபாட் எந்திரத்தின் சிறிய அளவிலான மானிடரில்  நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவருக்கான சின்னம் போன்ற விவரம் அடங்கிய சீட்டு தெரியும். 7 நொடிகள் மட்டுமே அதை பார்க்க முடியும். பின்னர் அந்த சீட்டு அந்த விவிபாட் எந்திரத்திற்குள்ளேயே விழுந்துவிடும்.இந்த நடவடிக்கைகள் முடிந்ததும், வெளியே வர வேண்டும். 

தலைப்பு செய்திகள்

CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Embed widget