Haryana, J&K Election Result LIVE: 'முதல்வர் பதவி வழங்கப்பட்டால் வேண்டாம் என்று கூறமாட்டேன்' - பாஜகவின் அனில் விஜ்
Haryana, Jammu Kashmir Election Result 2024 Live: ஹரியானா மற்றும் ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை, தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய ஏபிபி நாடு செய்தி இணையதளத்துடன் இணைந்திருங்கள்.
LIVE

Background
Haryana, J&K Election Result LIVE: ஹரியானா தேர்தல் முடிவுகள் களநிலவரத்துக்கு எதிராக உள்ளது - எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்!
ஹரியானா சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,” ஹரியானா சட்டமன்றத் தேர்தக்ல் முடிவுகள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. தேர்தல், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளோம். நிர்வாகம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பியதாகவே களநிலவரம் இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளில் அதன் பிரதிபலிப்பு துளியும் இல்லை. இந்த முடிவுகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.இது தொடர்பாக ஆய்வு செய்வோம்.
“ வாக்கு எண்ணிக்கை, இ.வி.எம். மெசின் செயல்பாடு குறித்து புகார்கள் பெற்றுள்ளோம். அந்த தகவல்களைத் திரட்டி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்.” என்று தெரிவித்தார்.
Haryana, J&K Election Result LIVE: ஹரியானா தேர்தல் முடிவுகள் களநிலவரத்துக்கு எதிராக உள்ளது - எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்
ஹரியானா சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,” ஹரியானா சட்டமன்றத் தேர்தக்ல் முடிவுகள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. தேர்தல், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளோம். நிர்வாகம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பியதாகவே களநிலவரம் இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளில் அதன் பிரதிபலிப்பு துளியும் இல்லை. இந்த முடிவுகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.இது தொடர்பாக ஆய்வு செய்வோம்.
“ வாக்கு எண்ணிக்கை, இ.வி.எம். மெசின் செயல்பாடு குறித்து புகார்கள் பெற்றுள்ளோம். அந்த தகவல்களைத் திரட்டி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்.” என்று தெரிவித்தார்.
Haryana, J&K Election Result LIVE: முதலமைச்சர் பதவி வழங்கினால் நிராகரிக்க மாட்டேன் -அனில் விஜ்
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது. 48 இடங்களில் முன்னிலை வகிக்கும் பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் அனில் விஜ் தெரிவிக்கையில் தனக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டால் வேண்டாம் என்று கூறமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
Haryana Election Results LIVE: 'Won't Say No If CM Post Is Offered,' BJP's Anil Vij Tells ABP News#HaryanaElectionResult #Congress #ElectionResult2024 #ABPResultshttps://t.co/ihyB7Rnmyb
— ABP LIVE (@abplive) October 8, 2024
Haryana, J&K Election Result LIVE: தேர்தல் வெற்றி! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வினேஷ் போகத்!
ஜூலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 5 ஆயிரத்து 909 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் யோகேஷ்குமாரை வீழ்த்தி வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வினேஷ் போகத்திற்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
#WATCH | Jammu: On J&K Assembly election result trends, BJP leader G Kishan Reddy says, "No party has won a clear majority so far... We have the maximum number of seats ever in our party's history in J&K. Rahul Gandhi claimed that he brought down PM Modi's confidence, but the… pic.twitter.com/sKdgmLaTWk
— ANI (@ANI) October 8, 2024
ஜம்மு பிராந்தியத்தில் மொத்தமுள்ள 43 தொகுதிகளில் 26 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது
ஜம்மு பிராந்தியத்தில் மொத்தமுள்ள 43 தொகுதிகளில் 26 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது. காஷ்மீர் பிராந்தியத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக முன்னிலை பெறவில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்