மேலும் அறிய

Haryana J&K Election: ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி? ஜம்மு&காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி? - இன்று வாக்கு எண்ணிக்கை

Haryana J&K Election: ஹரியானா மற்றும் ஜம்மு &காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

Haryana J&K Election: ஹரியானா மற்றும் ஜம்மு &காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இன்று வாக்கு எண்ணிக்கை

ஹரியானா மற்றும் ஜம்மு &காஷ்மீர் மக்களுக்கு  அக்டோபர் 8 ஆம் மிக முக்கிய நாளாகும். அங்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.. காலை 8 மணி முதல் ஆரம்ப நிலைகளுடன் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும். அதன் முடிவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஹரியானா மற்றும் யூனியன் பிரதேசத்தின் தலைவிதி தீர்மானிக்கப்படும். 

ஹரியானாவில், நயாப் சிங் சைனியை தொடர்ந்து மூன்றாவது முறையாகப் ஆட்சியைப் பிடிக்க பாஜக முனைப்புடன் உள்ளது, அதே நேரத்தில் பாஜகவுக்கு சவாலாக திகழும், அந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற காங்கிரஸும் தயாராக உள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஹரியானா மற்றும் ஜம்மு& காஷ்மீரில் காங்கிரஸுக்கு பெரும்பான்மையைக் காட்டியுள்ளன. வாக்கு எண்ணும் இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஹரியானா சட்டமன்ற தேர்தல் நிலவரம்:

ஹரியானாவின் 22 மாவட்டங்களில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் 93 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, 30 நிமிடங்களுக்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) எண்ணப்படும். மக்களவை தேர்தலுக்கு பின், ஹரியானாவில் பாஜக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நடக்கும் முதல் பெரிய நேரடி போட்டி இதுவாகும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளின்படி, பாஜக ஹாட்ரிக் வெற்றியை நழுவவிட, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஹரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது. இந்த மாநிலத்தில் அக்டோபர் 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் 464 சுயேச்சைகள், 101 பெண்கள் உள்பட மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

ஜம்மு&காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் நிலவரம்:

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவை ஜம்மு மற்றும் காஷ்மீர் கண்டுள்ளது. 2014 தேர்தலுக்குப் பிறகு இந்த யூனியன் பிரதேசத்தில் முதல் முறையாகத் தேர்தல் நடைபெறுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ்-என்சி கூட்டணி மற்றும் பிடிபி எல முனை போட்டி நிலவுகிறது. 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ்-என்சி கூட்டணி முன்னிலை பெறுவதைக் காட்டியது. கருத்துக் கணிப்புகளின்படி, காங்கிரஸ் மற்றும்  கூட்டணி 35 முதல் 50 இடங்களையும், பிடிபி 4 முதல் 12 இடங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவை தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு எதிர்பார்த்தபடி அமையவில்லை. அதைதொடர்ந்து, நடைபெறும் இந்த இரண்டு மாநில சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகளை ஒட்டுமொத்த நாடே உற்று நோக்குகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "நான் திருப்தி அடையல" விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி பேசியது ஏன்?
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயிTVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "நான் திருப்தி அடையல" விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி பேசியது ஏன்?
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வந்த ஹேப்பி நியூஸ்.. நன்றி தெரிவிக்கும் பயணிகள்..
சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வந்த ஹேப்பி நியூஸ்.. நன்றி தெரிவிக்கும் பயணிகள்..
Delhi Ganesh:
Delhi Ganesh: "வளந்ததும் மறந்துட்றாங்க" பிரதீப் ரங்கநாதன் மீது டெல்லி கணேஷிற்கு கோபமா?
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின்,  “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின், “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
Delhi Ganesh:
Delhi Ganesh: "முனியாண்டி முதல் சிதம்பரம் வரை" காலத்தால் அழியாத டெல்லி கணேஷ் கதாபாத்திரங்கள்!
Embed widget