மேலும் அறிய

மக்கள் மனதிலே ஆழமாக திமுகவினுடைய தவறுகள் பதிந்து இருக்கிறது - ஜி.கே.வாசன்

அண்ணாமலை திமுகவினருடைய தவறுகளை புள்ளி விவரங்களோடு தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு.எம்.முருகானந்தத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சைக்கு வருகை புரிந்தார்.

முன்னதாக அவர் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சியினுடைய தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தியா வளர்வதற்கான மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய பிரகாசமான தேர்தல் அறிக்கை. ஆக்கப்பூர்வமான முறையிலே இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக தொழில், கல்வி, விவசாயம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் பெருமையோடு கூற வேண்டும் என்றால் பெண்களுடைய வளர்ச்சி நாட்டினுடைய வளர்ச்சி என்ற ரீதியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வரும் 5 வருடங்களில் அனைத்து துறைகளிலும் அவருடைய பங்கேற்பை உறுதி செய்து கொள்ளும் வகையிலே தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது.

தொழில்வளம், தொழில் வளர்ச்சி என்பது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்கிறது என்று நான் குறிப்பிட விரும்புகிறேன். பிரதமர் மோடி அவர்கள் தமிழ், தமிழர்கள், தமிழர்கள் கலாச்சாரம், பண்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அதனை தங்களுடைய தேர்தல் அறிக்கையிலே பிரதிபலித்திருக்கிறார். மேலும் மிக முக்கியமாக திருக்குறள் பண்பாட்டு மையம் என்பது தமிழுக்கு மேலும் கிடைக்கின்ற பெருமை அந்தஸ்தாக இருக்கிறது என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.

கச்சத்தீவு பிரச்சனை மீனவர்களுக்கு மிக முக்கியமான பிரச்சனை. இந்த கச்சத்தீவை தாரை வார்த்தது ஒரு வரலாற்று மிக்க தவறான செயல்பாடு. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தான் இந்த நிலை ஏற்பட்டது. அன்றைக்கு திமுக, காங்கிரஸ் கட்சியினுடைய முடிவுக்கு உடந்தையாக இருந்ததே தவிர, மீனவர்களுக்காக அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இன்றைக்கு அவர்கள் வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து நீலிக்கண்ணீர் வடிக்க நினைக்கிறார்கள்.


மக்கள் மனதிலே ஆழமாக திமுகவினுடைய தவறுகள் பதிந்து இருக்கிறது - ஜி.கே.வாசன்

உண்மை நிலை இப்படி இருக்கும் போது மீனவர் சமுதாயத்திற்கு காங்கிரஸ், திமுக இழைத்த அநீதியை அவர்கள் ஒருக்காலும் மறக்க மாட்டார்கள். மன்னிக்க மாட்டார்கள் தற்போது இந்த பிரச்சனை இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை. இதனை மிக முக்கிய பிரச்சினையாக கருதி இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் படிப்படியாக சுமூகமான நிலையிலே பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கபூர்வமான முறையில் தான் இது போன்ற பிரச்சினைகளைத் தீர்வு ஏற்படுத்த முடியும்.

குறிப்பாக நம்முடைய மீனவர்கள், இலங்கை மீனவர்களிடையே நட்புறவு எப்பொழுதும் தொடர வேண்டும். இரு நாடுகளுடைய நட்புறவு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய முக்கியமான சூழலை மனதில் வைத்து படிப்படியாக தேசிய ஜனநாயக கூட்டணி வரும் நாட்களிலே மீனவர்களுக்கு நம்பிக்கை கொண்டிருக்கும் வகையிலே கச்சத்தீவு பிரச்சனை அணுகும் என்பதிலே மக்களுக்கும், மீனவர்களுக்கும் நம்பிக்கை அதிகமாக இருக்கிறது.

எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் வழக்கில் தமிழக அரசு பாஜகவின் மீது தேர்தல் நேரத்திலே களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக திருநெல்வேலியின் வெற்றி வேட்பாளர் சட்டமன்றத்தில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது குற்றம் சாட்ட நினைக்கிறது. காவல்துறையை வைத்து அழுத்தம் கொடுக்க நினைக்கிறது. வாக்காளர்கள் திமுகவினுடைய அதிகார பலத்தை வைத்து தேர்தல் நடத்துவதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். வாக்கு வங்கி அரசியலுக்கு திமுக செய்யக்கூடிய தவறான காரியங்கள் எடுபடாது.

அண்ணாமலை அவர்கள் திமுகவினருடைய தவறுகளை புள்ளி விவரங்களோடு தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதன் அடிப்படையிலே வாக்காளர்களுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இதனை சகித்துக் கொள்ள முடியாத, ஜீரணிக்க முடியாத திமுக அண்ணாமலை அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் இது போன்ற நிலை மாறும் என்று நினைக்கிறார்கள். மக்கள் மனதிலே ஆழமாக திமுகவினுடைய தவறுகள் பதிந்து இருக்கிறது . எதிர்மறை வாக்குகளை எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணி உடைய தலைவர்கள் மீது வழக்கு போடுவதால் அவர்களால் இனி மாற்ற முடியாது.

தற்போது நான் 31 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியினுடைய வெற்றிக்காக என்னுடைய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன். இன்றைக்கு 33 தொகுதிகள் முடிவடையும். தஞ்சையும், பெரம்பலூர் இன்றைய செல்ல இருக்கிறேன். நாளையும், நாளைய மறு தினமும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு செல்கிறேன். சென்னை தொகுதிகளுக்கு செல்ல இருக்கிறேன்.  அனைத்து தொகுதிகளிலும் மக்கள் மனநிலையிலே மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஒரு வலுவான இந்தியா தேவை. இந்தியாவினுடைய பொருளாதாரம் உயர்வதற்கு பாரதப் பிரதமர் அவருடைய மூன்றாம் முறை ஆட்சி தொடர்வது அவசியம் என்று மக்கள் நினைக்கிறார்கள். மேலும் இந்தியாவினுடைய பாதுகாப்பை, ஆளுமை திறமை கொண்ட மோடி அவர்களது தலைமை தான் உறுதிப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். எனவே தேசிய ஜனநாயக கூட்டணி உடைய வெற்றி வாய்ப்பு தமிழகத்திலே மிகப் பிரகாசமாக இருப்பதாகவே என்னுடைய கருத்து.

தமிழகத்திலே மிகப் பிரகாசமாக இருப்பதாகவே என்னுடைய கருத்து. 29 பைசா என்று பிரதமருக்கு பெயர் வைப்பது, இதைவிட கீழ்த்தரமான ஒரு அரசியலை, ஒரு பேச்சை பொறுப்புள்ள ஒருவர் செய்ய முடியாது. பேச முடியாது. சாதாரண வாக்காளர்கள் கூட இதனை கேட்டு தலை குனிந்து அவர்களை பார்க்கிறார்கள். காரணம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இன்று வரை மத்தியிலே பல பிரதமர்கள், பல கட்சிகள், பல ஆட்சிகள் பல கூட்டணிகள் அதிலே பெரும்பாலான ஆண்டுகளிலே காங்கிரஸ் ஆட்சி. காங்கிரஸ் கூட்டணி என்பதை நான் குறிப்பிட்டு கூற விரும்புகிறேன்.

சுதந்திரத்திற்கு பிறகு இன்று வரை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்தியிலிருந்து கொடுக்கக்கூடிய பணம் நம்முடைய மாநிலத்தினுடைய வளர்ச்சிக்காக என்று ஒரு கோட்பாடு இருக்கிறது. அந்த கோட்பாட்டின் அடிப்படையிலே இது கொடுக்கப்படுகிறது. இது தனிப்பட்ட முறையில் யாரும் தீர்மானிக்க முடியாது. நேரு காலத்தில் இருந்து மோடி காலம் வரை அதற்கென்று ஒரு நிதி அதனுடைய மேலாண்மை என்பதற்கு ஒரு குழு இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தினுடைய அகலம் என்ன நீளம், என்ன அதனுடைய மக்கள் தொகை என்ன? பிஹார் எவ்வளவு பின்தங்கிய மாவட்டம். அதனால் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி நிதி ஒதுக்க இயலாது. இந்தியா என்று வந்தால் இந்தியர்கள் என்று அர்த்தம். அதை பிரித்துப் பார்ப்பது திமுகவுக்கு வழக்கமாகிவிட்டது. பழக்கமாகிவிட்டது  இந்தியர்கள் என்று அவர்கள் என்றைக்கு முழுமையாக தங்கள் மனதிலே எண்ணுகிறார்களோ அன்றைக்கு தான் அவர்களுக்கு இந்திய அரசியலுடைய இந்திய வளர்ச்சியினுடைய நாட்டினுடைய செயல்பாட்டிலே புரிதல் ஏற்படும். என்பது என்னுடைய கருத்து.

வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் இந்தியாவினுடைய கலாச்சாரம். ஒரு மாநிலத்திலே பேரிடர் ஏற்படுகிறது. அதிக மழை அதிக வெள்ளம் என்றால் அதற்கு மத்திய அரசு உதவித்தொகை கொடுக்கிறது என்றால் மக்களுக்கு பணியாற்றுகின்றது என்றால் அதிலே இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடைய பங்கும் பொருந்தும். ஒரு மாநிலத்திலே ஏதாவது ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டால் அந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தக்கூடிய நிதிநிலை அவசியம், அவசரம் என்றால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடைய பங்கு அதிலே இருக்கிறது. எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நண்பர்கள் மத்திய அரசு என்பதை மறந்து ஒன்றிய அரசு என்று கூறிய பிறகு இது போன்ற தவறான கண்ணோட்டத்தில் அவர்கள் இந்தியாவை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்  இந்திய மக்கள் என்ற கண்ணோட்டத்தில் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இந்தியா என்றால் இந்தியா அது அனைவருக்கும் ஒன்றுதான். உங்களுடைய பார்வையை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன் .  

தமிழகத்தில் நான்கு முனை கூட்டணி அரசியல் என்றால் மக்கள் மனநிலையிலே மாற்றம் தெரிகிறது  முதல் வாக்காளர் உடைய எண்ணம் தெளிவாக இருக்கிறது. தேசிய எண்ணம் கொண்டவர்களாக தமிழகம் இன்றைக்கு செயல்பட தொடங்கி இருக்கிறது. மத்தியில் ஆட்சி நிலையாக இருக்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடிய தலைமையை தேசிய ஜனநாயக கூட்டணி கொடுத்திருக்கிறது. 10 ஆண்டுகால ஆட்சியினுடைய சாதனைகள், வளர்ச்சித் திட்டங்கள் இந்தியாவுக்கு தொடர வேண்டும். அதன் அடிப்படையிலே நல்லரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற மத்திய அரசு மூன்றாவது முறை இந்தியாவை வல்லரசாக மாற்றும் என்று வாக்காளர்கள் நம்புகிறார்கள். அதன் அடிப்படையிலேயே தமிழகத்திலே நான்கு அணிகளிலே முதல் அணியாக தேசிய ஜனநாயக கூட்டணி செயல்படுகிறது.


மக்கள் மனதிலே ஆழமாக திமுகவினுடைய தவறுகள் பதிந்து இருக்கிறது - ஜி.கே.வாசன்

காவிரிக்கு குறுக்கே மேகதாது என்ற பெயரிலே அணைகட்ட நினைக்கும் கர்நாடக அரசுக்கு சட்ட ரீதியாகவே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத்திய அரசு ஒருபோதும் கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. தமிழகம் குறிப்பாக டெல்டா மாவட்டம் பாலைவனம் ஆகிவிடும் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். காவிரி பிரச்சனை என்பது நம்முடைய டெல்டா விவசாய மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை மட்டுமல்ல உயிர் பிரச்சனையும் தான்  என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசின் முதல்வரும், துணை முதல்வரும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையிலேயே காவிரிக்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம். மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டு அல்ல. துரதிஷ்டவசமாக தமிழகத்தினுடைய திமுக ஆட்சியாளர்கள் கூட்டணி, வாக்கு வங்கி அரசியல் என்ற காரணத்தினால் அதனை கண்டிக்காமல், அதனை எதிர்த்து அறிக்கைகள் கொடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது விவசாயிகளுக்கு வேதனை ஏற்படுத்துகிறது. வருத்தத்தை ஏற்படுத்துகிறது. காவேரி பிரச்சனையை தமிழக அரசு ஆக்கப்பூர்வமான முறையிலே தைரியமாக கர்நாடக அரசிடமிருந்து பெற்று தரக்கூடிய உயர்நிலையை ஏற்படுத்த வேண்டும். மாறாக வாக்கு வங்கி கூட்டணி அரசியலிலே திமுக, காங்கிரஸ் ஈடுபடுவது விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் செயல். விவசாயிகள் உங்களுடைய தவறான கண்ணோட்டத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் செயல். விவசாயிகள் உங்களுடைய தவறான கண்ணோட்டத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்

மேகதாது அணை கட்டக்கூடாது என்பது இன்றைக்கு இல்ல என்னுடைய இறுதி மூச்சு வரை அதை வலியுறுத்துவது விவசாய குடும்பத்தில் இருந்து பிறந்தவர் விவசாயி மகன் காவிரி டெல்டாவை சேர்ந்தவர் என்பது என்னுடைய கருத்து மட்டுமல்ல.அதுதான் என்னுடைய செயல்பாடாகவே இருக்கும். அதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது. பெங்களூருக்கு தண்ணீர் கொடுப்பதிலே தமிழக மக்களுக்கு எந்த தயக்கமும் கிடையாது. அதேபோல தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பதிலே கர்நாடக காங்கிரஸ் அரசு தடையில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய பணிவான வேண்டுகோள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
Expensive Passport: இவ்வளவு காசு கட்டணுமா..! உலகின் விலையுயர்ந்த பாஸ்போர்ட் எது? லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Expensive Passport: இவ்வளவு காசு கட்டணுமா..! உலகின் விலையுயர்ந்த பாஸ்போர்ட் எது? லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Rashmika Mandana:
Rashmika Mandana: "தேசிய விருது கன்ஃபார்ம்" அடித்துச் சொல்லும் புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா!
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Embed widget