மேலும் அறிய

’கோவை அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம்’ - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

"கோவையில் உள்ள காவல் துறையினர் திமுக கட்சிக்காரர்களாகவே மாறிவிட்டனர். இது வன்மையாக கண்டிக்க கூடியது. திமுக ஜனநாயக படுகொலை செய்கிறது"

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அரசு அதிகாரிகள் திமுகவிற்கு ஆதரவாக அதிமுக வேட்பாளர்களை தேவையற்ற காரணங்களை கூறி அலைக்கழிப்பதாகவும், காவல் துறையினர் அடக்கு முறையை ஏவி ஒரு தலைபட்சமாக அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்வதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும் தேர்தல் நேர்மையாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

’கோவை அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம்’ - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

இதையடுத்து அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக அதிமுக வேட்பாளர்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு அலைக்கழிக்கின்றனர்.  பல்வேறு விதிமுறைகளை கூறி குழப்பி வருகின்றனர். கோவையில் சூழல் மாறியுள்ளது.  இங்கு உள்ள காவல்துறையினரும் வேறு மாறி உள்ளனர். அதிமுக வேட்பாளர்களுடன் தேர்தல் வேலைக்கு செல்பவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வழக்குப் பதிவு செய்து மிரட்டி வருகின்றனர். கோவையில் உள்ள காவல் துறையினர் திமுக கட்சிக்காரர்களாகவே மாறிவிட்டனர். இது வன்மையாக கண்டிக்க கூடியது. திமுக ஜனநாயக படுகொலை செய்கிறது.

ஆளும் கட்சியாக இருப்பவர்கள் திட்டங்களை சொல்லி வாக்கு கேளுங்கள். கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கொடுத்துள்ளோம். கோவையை பொறுத்தளவில் என்றைக்கும் கோவை அதிமுகவின் கோட்டை. உள்ளாட்சி தேர்தலில் உறுதியாக மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் அதிமுக கைப்பற்றும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, கோவையில் வேகமாக பணிகள் நடைபெற்றன. தற்போது எந்த பணிகளும் நடப்பதில்லை. எங்கேயும் முறையாக குப்பை எடுக்கவில்லை. தண்ணீர்முறையாக விநியோகம் இல்லை போன்ற சூழல் உள்ளது. இந்த ஆட்சியில் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் வேலை செய்வதில்லை.

’கோவை அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம்’ - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

திமுகவினர் அதிமுகவினர் எல்லாரையும் பழி வாங்குகின்றனர். என்ன வழக்கு போட்டாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். தேர்தலின்போது என்னை வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு அழைப்பார்கள். காவல் துறையினரை வைத்து தான் திமுக தேர்தலை சந்திக்கின்றனர். நாங்கள் ஆளும் கட்சியாக இருந்த போது பத்திரிகைகள் எங்களை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. இப்போதும் ஆளும் கட்சியை விடுத்து எங்களையே பத்திரிக்கையாளர்கள் விமர்சிக்கின்றனர். கோவை மாவட்ட மக்கள் அமைதியானவர்கள். அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை வைத்து மிரட்டி யாரும் வெற்றி பெற முடியாது. யாரை வெற்றிபெற செய்ய வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும். கோவை அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம்” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
Embed widget