முதல்வர் பதவியை ராஜினாமா செய்த இபிஎஸ்; ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்
தோல்வியை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தனது முதல்வர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்கிறார் .
தமிழக சட்டமன்ற தேர்தலில் அரிதி பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியுள்ளது. குறிப்பிடும் படியாக இடங்களை பிடித்தாலும் பெரும்பான்மைக்கு குறைவான இடங்களில் வெற்றி பெற்றதால் ஆட்சியை இழந்த அதிமுக, அரசிலிருந்து முறைப்படி விலகியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் வழங்கிய நிலையில், அவர் முதல்வர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
அதே நேரத்தில் அதிகப்படியான இடங்களை பிடித்த திமுகவின் தலைவர் ஸ்டாலினின் பதவியேற்பு விழா, கொரோனா விதிகளின் படி எளிமையான முறையில் கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளது. முதல்வராக ஸ்டாலினும் , அவரைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையும் பொறுப்பேற்கும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்கிடையில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் <a href="https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>@mkstalin</a></p>— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) <a href="https://twitter.com/EPSTamilNadu/status/1389084091358670848?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>May 3, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
முதல்வராக பொறுப்பேற்கும் ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, வெவ்வேறு டுவிட்டுகளில் மேற்கு வங்க முதல்வர் மம்தா மற்றும் கேரள முதல்வர் பினராய் ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.