மேலும் அறிய

Exit Poll Results 2024: தொடர்ந்து மூன்றாவது முறையாக படுதோல்வி.. பரிதாப நிலையில் காங்கிரஸ்! கருத்துக்கணிப்பு இதோ!

Lok Sabha Election Exit Poll Results 2024: மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. காங்கிரஸ் படுதோல்வி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த மக்களவை தேர்தல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த 19ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு மொத்தம் 7 கட்டங்களாக நடந்தது. இன்று இறுதி கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

வரும் ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகிறது.

மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா கூட்டணி: அந்த வகையில், பல்வேறு செய்தி நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பல்வேறு மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு இந்தியா கூட்டணி சவால் அளித்த போதிலும் அது பாஜகவின் வெற்றியை தடுத்து நிறுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் 153 முதல் 183 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெல்லும் என ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 353 முதல் 383 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மட்டும் 315 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்புகளின்படி, பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ளது. வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரையில், 45.1 சதவிகித வாக்குகளை பாஜக கூட்டணி பெறும் என ஏபிபி சி வோட்டர் கணித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன? அதேபோல, 36.6 சதவிகித வாக்குகளை இந்தியா கூட்டணி பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக மோசமான தோல்வியை சந்திக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தமாக 21.4 சதவிகித வாக்குகளுடன் 74 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. தோல்வியை சந்தித்த போதிலும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்தியா கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 37 முதல் 39 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சண்டிகர், தாதர் மற்றும் நாகர் ஹவேலி, மிசோரம், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி 1 தொகுதியில் கூட வெற்றிபெறாது என கூறப்பட்டுள்ளது.

Exit Poll Results 2024 LIVE: பாஜகவா? இந்தியாவா? மக்களின் மனநிலை என்ன? கருத்துக் கணிப்பு என்ன சொல்லுது? உடனுக்குடன் அப்டேட்ஸ்

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget