மேலும் அறிய

எனது நண்பர் ஸ்டாலின் தேர்தலில் நிச்சயம் வெற்றி அடைவார் - வானிலை புகழ் ரமணன்

தனது நண்பர் நிச்சயமாக வெற்றி அடைவார் என வானிலை மைய முன்னாள் இயக்குனர் ரமணன் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ம.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் 

இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் வரும் ஏப்ரல் 19 -ம் தேதி அன்று நடைபெற உள்ளது. ஜூன் 4 அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறாத நிலையில் தற்போது களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

எனது நண்பர் ஸ்டாலின் தேர்தலில் நிச்சயம் வெற்றி அடைவார் -  வானிலை புகழ் ரமணன்

பாமக வேட்பாளர் 

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, பாமக ஆகிய நான்கு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அதனை தொடர்ந்து போட்டியிடும் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். 

Sowmya Anbumani Daughters Campaign: பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து அவரது மகள்கள் தீவிர பிரச்சாரம்.

எனது நண்பர் ஸ்டாலின் தேர்தலில் நிச்சயம் வெற்றி அடைவார் -  வானிலை புகழ் ரமணன்

வானிலை ரமணன் வாழ்த்து

அப்போது செம்பனார்கோயில் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த வேட்பாளர் ம.க ஸ்டாலினை சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குனர் ரமணன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், ”ம.க.ஸ்டாலின் இன்றோ நேற்றோ எனக்கு பரீட்சையமானவர் அல்ல ஆரம்ப கால முதலே நட்பு அதிகம், ம.க. ஸ்டாலின் அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். இதனை தான் கல்லூரி பயின்ற காலத்தில் கண்கூடாக கண்டுள்ளேன். இப்பேற்பட்ட மனிதர்களை பார்ப்பது அரிது. எனது நண்பரான ம.க. ஸ்டாலின் நிச்சயமாக தேர்தலில் வெற்றி அடைவார். அவர் வெற்றி வேட்பாளர்” என அரவணைத்து பாராட்டினார். முன்னதாக வேட்பாளர் ம.க‌.ஸ்டாலின் வானிலை ரமணனுக்கு சால்வை அணிவித்து வணங்கி ஆசி பெற்றார்.

Vagai Chandrasekar: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, அழிக்கப்பட்டுவிடும் - வாகை சந்திரசேகர்

எனது நண்பர் ஸ்டாலின் தேர்தலில் நிச்சயம் வெற்றி அடைவார் -  வானிலை புகழ் ரமணன்

தொகுதி விபரம்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கியுள்ள 160-சீர்காழி (தனி) , 161 - மயிலாடுதுறை , 162- பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 170- திருவிடைமருதூர் (தனி), 171 - கும்பகோணம் மற்றும் 172-பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 1,22,727 ஆண் வாக்காளர்களும், 1,25,660 பெண் வாக்காளர்களும், 11 மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,16,611 ஆண் வாக்காளர்களும், 1,18,948 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1,33,264 ஆண் வாக்காளர்களும், 1,37,454 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 1,29,763 ஆண் வாக்காளர்களும், 1,32,931 பெண் வாக்காளர்களும் , 12 மூன்றாம் பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 1,30,162 ஆண் வாக்காளர்களும், 1,37,298 பெண் வாக்காளர்களும் , 15 மூன்றாம் பாலினத்தவர்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 1,27,410 ஆண் வாக்காளர்களும், 1,33,268 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget