மேலும் அறிய

இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பரப்புரை...!

’’சேலத்தில் உள்ள 195 வாக்குச்சாவடிகளில் 58 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன’’

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறமால் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில், எஞ்சிய இடங்களுக்கும் தமிழ்நாடு  முழுவதும் காலியக உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கும் வருகின்ற 9ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பரப்புரையானது இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பரப்புரை...!

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 10 ஊராட்சி மன்ற தலைவர்கள் 23 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 35 பதவிகள் காலியாக உள்ளது. இவற்றில் 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 24 பதவிகளுக்கு மட்டும் நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இத்தேர்தலில் மொத்தம் 1,22,857 பேர் வாக்களிக்கின்றனர். இவர்களுக்கான 195 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 58 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, ஓமலூரில் 18 வாக்குச்சாவடியில், எடப்பாடியில் 10 வாக்குச்சாவடிகள், பனமரத்துப்பட்டி யில் 8 வாக்குச்சாவடியில், அயோத்தியா பட்டினத்தில் 7 வாக்குச் சாவடிக்கும், நங்கவள்ளி யில் 5 வாக்குச்சாவடியில், தாரமங்கலத்தில் 4 வாக்குச் சாவடியிலும், மேச்சேரியில் 3 வாக்குச் சாவடியும், வீரபாண்டி, தலைவாசல், வாழப்பாடியில் தலா ஒரு வாக்குச்சாவடியும் என மொத்தம் 58 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் 29 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 29 வீடியோ கேமரா மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பரப்புரை...!

தேர்தல் பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு மஞ்சள் நிறமும், ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு பச்சை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவருக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் இருக்கு வெள்ளை நிறத்திலும் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படுகிறது. இடைத்தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அனைத்தும் ஏற்கனவே அச்சிடப்பட்டு சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 785 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவர்களுக்கான மூன்று கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையில், நாளை இறுதி பயிற்சி வழங்கப்படுகிறது. பின்னர் இவர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்கி, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுவார்கள். தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது. இதனால் வேட்பாளர்களின் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதைப்போல் ஊரக உள்ளாட்சி துறை அலுவலர்களும் இறுதிகட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடைபெறும் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடக்கும் இடங்களில் மதுபானம் விற்பதற்கு அனுமதி இல்லை.

தலைப்பு செய்திகள்

Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget