மேலும் அறிய

Anbumani: ஆபாசமாக திட்டிய திமுகவினர்; இளம்பெண் தற்கொலை- பொய்ப்பிரச்சாரத்துக்கு தடை விதிக்க அன்புமணி கோரிக்கை

சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடையப்போவது உறுதி என்பதை அறிந்து கொண்ட திமுக, மோசடி செய்தாவது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது- அன்புமணி.

திமுகவினர் ஆபாசமாக திட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாகவும் திமுகவின் பொய்ப் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’திருச்சி மண்ணச்சநல்லூரில் திமுகவினர் வினியோகித்த ரூ.8000 போலிக் கூப்பனை தமக்கு ஏன் வழங்கவில்லை? என்று கூறி வாக்குவாதம் செய்த சிந்துஜா என்ற பட்டியலின இளம்பெண்ணை திமுகவினர் ஆபாசமான வார்த்தைகளில் திட்டி, தாக்கியதால்  அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிந்துஜாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடையப்போவது உறுதி என்பதை அறிந்து கொண்ட திமுக, மோசடி செய்தாவது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு கட்டமாக எல்லா ஊர்களிலும் போலிக் கூப்பன்களை வழங்கி கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறி வருகிறது.

போலி கூப்பனைக் கேட்டதற்காக..

அது பொய் என்பதை உணராமல் போலி கூப்பனைக் கேட்டதற்காகத்தான்  திருச்சியில் பட்டியலின பெண்ணைத் திட்டியும், தாக்கியும் தற்கொலை செய்துகொள்ள வைத்திருக்கிறது திமுக. கொடிய பாம்பை விட திமுக மிகவும் தீமையானது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியின் பயன் என்னவென்றால், ரூ.8000 கூப்பனுக்காக அலையும் அளவுக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தைச் சீரழித்திருப்பதுதான்.  திமுக ஆட்சிக்கு வந்தால் கூப்பன் வழங்கப்படும் என்பது முதல் மோசடி என்றால், துண்டுச்சீட்டை அச்சிட்டுக் கொடுத்து, அதைக் கடைகளில் கொடுத்து பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறி மக்களை ஏமாற்றுவது இன்னொரு மோசடி ஆகும்.  இந்த மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் திமுகவின் இந்த மோசடிக்கு துணை நிற்பதும் கண்டிக்கத்தக்கவை.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சாதனை என்று கூறி வாக்குக் கேட்பதற்கு திமுகவுக்கு எதுவுமே இல்லை. அதனால்தான் கூப்பன் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் 420 வேலைகளில் திமுக அரசு ஈடுபட்டிருக்கிறது. இதற்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.  போலி கூப்பன்களை வழங்கி  மக்களை ஏமாற்றும் திமுகவின் மோசடி பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும்’’ என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget