" மோடி சுட்ட வடை அல்ல இது சாப்பிடும் வடை " நூதன முறையில் பிரச்சாரத்தை கையிலெடுத்த எம்எல்ஏ
Kanchipuram lok sabha constituency : " வீதி வீதியாக சென்ற சட்ட மன்ற உறுப்பினர் பொதுமக்களிடம் வீட்டுக்கு சென்று வாக்குறுதி துண்டறிக்கையை கொடுத்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் "
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி ( Kanchipuram lok sabha constituency )
வடை சுட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பு
செல்வத்தின் செல்வாக்கு என்ன ?
காஞ்சிபுரம் தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் செல்வம் மீது திமுக கட்சியினர் மத்தியில் பெரிய அதிருப்தி கிடையாது. தொடர்ந்து 5 ஆண்டு காலம் மக்களவை உறுப்பினராக இருந்தாலும், கட்சியை சேர்ந்த எந்த நிர்வாகி தங்களுடைய வீட்டு விழாக்களுக்கு அழைத்தால் தவறாமல் ஆஜர் ஆகிவிடுவார் செல்வம். நிர்வாகிகள், மக்கள் என யார் அலுவலகத்துக்கு வந்தாலும் சந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டிருப்பதால், பெரிய அளவில் திமுகவினர் மத்தியில் அதிருப்தி கிடையாது.
குறிப்பாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ ஆகியோரின் ஆதரவு முழுமையாக இருப்பதால், கட்சிப் பணி செய்ய பிரச்சனை கிடையாது. கூட்டணி கட்சியினர் இடையே கடந்த 5 ஆண்டுகளாக நட்பு பாராட்டி வந்ததால், கூட்டணி கட்சியினர் மத்தியிலும் செல்வத்திற்கு நல்ல பெயர் உள்ளது. இதை வைத்து இந்த தேர்தலிலும் மீண்டும் சூரியனை உதயமாக்கிவிடலாம் என்று நம்பிக்கையில் தேர்தல் பணியை துவங்கியுள்ளார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024 (Kanchipuram Lok Sabha Constituency 2024 )
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் (Kancheepuram Lok Sabha constituency) 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது.
இத்தொகுதியானது தனித்தொகுதி ஆகும். செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபொழுது, இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதனை அடுத்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் (தனி ) , செய்யூர் (தனி), திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது.