மேலும் அறிய

கட்சி வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடும் திமுகவினர் மாலைக்குள் மனுவினை வாபஸ் பெறுங்கள் - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

பணத்தால் மட்டும் அ.தி.மு.க வெற்றி பெற முடியாது என சேலத்தில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் இன்று மாலைக்குள் வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். பணத்தால் மட்டும் அ.தி.மு.க வெற்றி பெற முடியாது என சேலத்தில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

கட்சி வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடும் திமுகவினர் மாலைக்குள் மனுவினை வாபஸ் பெறுங்கள் - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, ஆறு நகராட்சி மற்றும் 31 பேரூராட்சிக்கு உட்பட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று முதல் அறிமுகம் செய்து வருகிறார். அதன்படி இன்று சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் 5 ரோடு சந்திப்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் 48 திமுக வேட்பாளர்கள் மற்றும் 12 கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அமைச்சர் கே.என். நேரு அறிமுகம் செய்து வைத்தார். முன்னதாக சேலம் மாவட்டம் கூட்டணி கட்சிகளின் செயலாளர்கள் பேசினார். 

பின்னர் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு இடையே உரையாற்றிய அமைச்சர் கே.என்.நேரு, பொது மக்களின் அனைத்து கோரிக்கைகளும் 2 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்து வாக்குகளை சேகரிக்குமாறு வேட்பாளர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர் மக்களின் அனைத்து கோரிக்களுக்கும் அரசு உரிய நிதியை ஒதுக்கி நிச்சயம் நிறைவேற்றி தரப்படும் என்றார். 

கட்சி வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடும் திமுகவினர் மாலைக்குள் மனுவினை வாபஸ் பெறுங்கள் - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

மேலும், சேலத்தில் திமுக வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் இன்று மாலைக்குள் வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் என்றார். உள்ளாட்சி தேர்தலில் பணத்தால் மட்டுமே அதிமுக வெற்றிபெற முடியாது; அதிமுகவினர் எவ்வளவுதான் பணத்தை கொடுத்தாலும் சேலம் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிதான் வெற்றி பெறும் என்ற கே.என். நேரு, சேலத்தை மீண்டும் திமுகவின் கோட்டையாக மாற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்று நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நடத்தப்பட்ட கூட்டங்களில் திமுக தொண்டர்கள் மட்டுமின்றி அப்பகுதி மக்களின் முகங்களிலும் ஒரு தெளிவு தெரிந்தது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். தேர்தலில் அதிமுக எந்தவித முயற்சியை கையில் எடுத்தாலும் திமுக அதை எதிர்கொள்ள தயாராக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget