DMK Candidate List: வாரிசுகள் ஆதிக்கம்! உதயநிதி ஸ்டாலின் டூ கார்த்திக் மோகன்- திமுகவில் இத்தனை பேரா? லிஸ்ட்!
DMK Candidate List 2026: திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் வாரிசு வேட்பாளர்களாக களமிறங்கும் நபர்கள் யார் யார் என்று விளக்கமாகக் காணலாம்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் வாரிசு வேட்பாளர்களாக களமிறங்கும் நபர்கள் யார் யார் என்று விளக்கமாகக் காணலாம்.
ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக ஆளும் திமுக கூட்டணியில் 26 கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க் கட்சியான அதிமுக கூட்டணியில் 7 கட்சிகள் இணைந்துள்ளன.
யார் யார் எப்படிப் போட்டி?
மேலும் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல தனித்துப் போட்டியிடுகிறது. முதல் முறையாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் காண்கிறது. இந்த நிலையில், கூட்டணி தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் ஆகியவை முழு வீச்சில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் 122 தொகுதிகளில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் நேரடியாகப் போட்டியிட உள்ளன. அதேபோல திமுக - பாஜக இடையில் 18 தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவ உள்ளது. மேலும் பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் திமுகவுடன் தலா 8 தொகுதிகளில் தனித்தனியாகப் போட்டியிடப் போகின்றன.
இந்த நிலையில், திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் வாரிசு வேட்பாளர்களாக களமிறங்கும் நபர்கள் யார் யார் என்று விளக்கமாகக் காணலாம்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் (துணை முதல்வர்)
திருச்சுழி தொகுதி- தங்கப்பாண்டியன் மகன் தங்கம் தென்னரசு (அமைச்சர்)
மதுரை மத்திய தொகுதி- பிடிஆர் பழனிவேல் ராஜனின் மகன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் (அமைச்சர்)
திருவெறும்பூர் தொகுதி- அன்பில் பொய்யாமொழி மகன் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (அமைச்சர்)
மன்னார்குடி தொகுதி– டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி. ராஜா (அமைச்சர்)
ஆயிரம் விளக்கு தொகுதி- நாகநாதன் மகன் எழிலன் நாகநாதன் (எம்எல்ஏ)
திருக்கோவிலூர் தொகுதி- பொன்முடி மகன் கவுதம சிகாமணி (முன்னாள் எம்.பி.)
திண்டுக்கல் தொகுதி- ஐ.பெரியசாமி மகன் ஐ.பி. செந்தில் குமார் (எம்எல்ஏ)
விருகம்பாக்கம் தொகுதி- விக்கிரமராஜா மகன் பிரபாகர் ராஜா (எம்எல்ஏ)
தி நகர் தொகுதி – ஜெ.அன்பழகன் மகன் ராஜா அன்பழகன்
ராணிப்பேட்டை தொகுதி- காந்தி மகன் வினோத் காந்தி
வில்லிவாக்கம் தொகுதி – மோகன் மகன் கார்த்திக் மோகன்
தென்காசி - அன்பகம் கலை மகன் கலை கதிரவன் ஆகிய வாரிசுகளுக்கு திமுகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
164 திமுக வேட்பாளர்கள்
2026 சட்டமன்றத் தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள 164 திமுக வேட்பாளர்களில் 125 பேர் பட்டம் பெற்றவர்கள் ஆவர். இதில் 18 பேர் மகளிர் ஆவர். அதேபோல முனைவர் 7 பேர், மருத்துவர் 15, பொறியியல் பட்டதாரிகள் 17 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புது முகங்கள் 60 பேருக்கு மேல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்




















