CM Stalin:பாஜக ஊழல்: “யோக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ளே வை” - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
Chief Minister Stalin: ராகுல் அவர்களே வருக, புதிய இந்தியாவுக்கு விடியல் தருக என முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருகிறார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணி தலைவர்களான முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கூட்டாக கோவையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் - ராகுல் காந்தி:
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, ராகுல் அவர்களே வருக, புதிய இந்தியாவுக்கு விடியல் தருக என பேச ஆரம்பித்தார். இந்த மக்களவைத் தேர்தலில் கதாநாயகனே காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் என்றும் இந்தியாவின் நம்பிக்கை நாயகன் ராகுல் காந்தி என்றும் தெரிவித்தார். மக்களிடம் செல் , மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுக்காக சேவையாற்று என்ற அண்ணாவின் கொள்கையின்படி ராகுல் யாத்திரை செய்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்ட ரஃபேல் விமானத்தை அதிக விலை கொடுத்து வாங்கியது பாஜக அரசு .ரபேல் ஊழல் குறித்து காங்கிரஸ் எழுப்பிய கேள்விக்கு இன்னும் பாஜக பதிலளிக்கவில்லை. அதானி குறித்து ராகுல் எழுப்பிய கேள்விக்கு, பதவியை பறித்தது பாஜக அரசு
யார் பிரதமராக வர வேண்டும் என்பதையும் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கவில்லை, யார் வர வேண்டும் என்பதையும் தெரிவிக்கவில்லை. கள்ள கூட்டணிக்கு ஆதாயம் தேடித்தர களத்துக்கு வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. யார் உண்மையான எதிரி என்று தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார். எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவது சிம்ப்ளி வேஸ்ட் என முதலமைச்சர் தெரிவித்தார்.
பாஜக ஊழல்:
பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில், தனது சாதனை என்று ஏதாவது ஒன்றையாவது கூறியுள்ளாரா?. ஊழலுக்கு என்று பல்கலைக்கழகம் கட்டினால், அதன் வேந்தராக இருக்க தகுதி பெற்றவர் பிரதமர் மோடி . தேர்தல் பத்திரத்தை கொண்டு வந்து, ஊழலையே சட்டப்பூர்வமாக செய்தது பாஜக
அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை கொண்டு நிறுவனங்களை மிரட்டி நிதி வசூல் செய்துள்ளது . பிஎம் கேர்ஸ் நிதியாக பெற்ற கோடிக்கணக்கான ரூபாயின் கதி என்ன?
7 லட்சம் கோடி முறைகேடு நடைபெற்றதாக மோடி அரசு மீது தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.