Chidambaram Election Results 2024: மீண்டும் வெற்றியை உறுதி செய்த தொல்.திருமாவளவன்!
Chidambaram Lok Sabha Election Results 2024:சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வி.சி.க.வின் தொல்.திருமாவளவன் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
தி.மு.க. கூட்டணி - தொல்.திருமாவளவன் (வி.சி.க.) - 4,79,112
அ.தி.மு.க. - சந்திரகாசன் -3,75,280
பா.ஜ.க. - கார்த்தியாயினி -1,55,666
நா.த.க. - ரா.ஜான்சி ராணி -62,415
12.40 மணி நிலவரம் - 1,13795 வாக்குகள் பெற்று தொல்.திருமாவளவன் முன்னிலை
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நிறைவடைந்தது.இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிதம்பரம் தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு அந்த தொகுதியின் விவரங்களை காணலாம்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதி:
இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
• சிதம்பரம்
• காட்டுமன்னார் கோவில் (தனி)
• புவனகிரி
• அரியலூர்
• ஜெயங்கொண்டம்
• குன்னம்
சிதம்பரம் தொகுதி வாக்காளர்கள் விவரம்
மொத்த வாக்களார்களின் எண்ணிக்கை - 15,19,847
ஆண் வாக்காளர்கள் - 7,49,623
பெண் வாக்காளர்கள் - 7,61,206
இதர வாக்காளர்கள் - 86
வேட்பாளர்கள் விவரம்
தி.மு.க. கூட்டணி - தொல்.திருமாவளவன் (வி.சி.க.)
அ.தி.மு.க. - சந்திரகாசன்
பா.ஜ.க. - கார்த்தியாயினி
நா.த.க. - ரா.ஜான்சி ராணி
பதிவான வாக்குகளின் விவரம்
இந்த தொகுதியில் 11 லட்சத்து 60 ஆயிரத்து 762 வாக்குகள் பதிவாகின. 71.68 சதவீதமாக இருந்தது. இவர்களுடன் பகுஜன் கட்சி மற்றும் 9 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். ஆனாலும், வி.சி.க., அதிமுக, பா.ஜ.க. ஆகிய மூவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்த தொகுதியில் 1984, 1989. 1991 ஆகிய 3 முறையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். 1998, 1999, 2004-ல் பா.ம.க.- வினர் வெற்றி பெற்றனர். 2009-ல் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றார். 2014-ல் அ.தி.மு.க.- வைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றார்.
2019-ல் மீண்டும் திருமாவளவன் வெற்றி பெற்று, எம்.பியாக இருக்கிறார். இதே தொகுதியில் 5 முறை போட்டியிட்ட இவர், 2 முறை வெற்றி பெற்றுள்ளார். 6-வது முறையாக இம்முறையும் பானை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார்.