மேலும் அறிய

Elections 2026: புதுச்சேரி, அசாம், கேரளமில் சரித்திரம்- இதுவரை இல்லாத உச்சத்தில் வாக்குப்பதிவு ஏன்? காரணம் என்ன?

Assembly Elections 2026: புதுச்சேரி மட்டுமின்றி அசாம் மற்றும் கேரளா மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், இதுவரை இல்லாத அளவில் வாக்குப்பதிவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Assembly Elections 2026: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 91 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி, கேரளா, அசாம் வாக்குப்பதிவு

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை கடந்த மாதம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி முதற்கட்டமாக தென்னிந்தியாவில் உள்ள கேரளா மற்றும் புதுச்சேரியிலும், வட இந்தியாவைச் சேர்ந்த அசாமிலும் உள்ள அத்தனை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அப்படி நடந்த இரண்டு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியலும் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிகிறது.

புதுச்சேரியில் நடந்த சரித்திரம்

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முன்பாக வந்த அனைவருமே வரிசையில் நிற்க அனுமதிக்கப்பட்டு, ஜனநாயக கடமையை செய்திட வாய்ப்பினை பெற்றனர். இதன் விளைவாக 89.8 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். அதாவது மாநிலத்தில் வாக்களிக்க தகுதி பெற்று இருந்த, 9 லட்சத்து 44 ஆயிரம் பேரில் சுமார் 8 லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். இது கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பதிவான 83.28 சதவிகிதத்தை விட அதிகம். அதோடு,கடந்த 1964ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் பதிவான அதிகபட்ச வாக்கு சதவிகிதமும் இதுவாகும். 2011ம் ஆண்டு தேர்தலில் பதிவான 86.19 சதவிகிதம் என்பதே முந்தைய அதிகபட்ச வாக்குப்பதிவாகும். இங்கு காங்கிரஸ் - என்.ஆர். காங்கிரஸ் - தவெக என மும்முனைப்போட்டி நிலவுகிறது. 

Elections 2026: புதுச்சேரி, அசாம், கேரளமில் சரித்திரம்- இதுவரை இல்லாத உச்சத்தில் வாக்குப்பதிவு ஏன்? காரணம் என்ன?

அசாம் வாக்குப்பதிவிலும் புதிய சாதனை

அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில், 85.91 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு பதிவான 82.04 சதவிகிதம் என்ற சாதனையை முறியடித்து, அந்த மாநில சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் பதிவான வாக்கு சதவிகிதமாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் உள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது. கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பதிவான 84.67 சதவிகிதம் என்பது இங்கு முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் உச்சம் தொட்ட வாக்குப்பதிவு

கேரளம் மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளில் சுமார் 78.27 சதவிகித வாக்குகள் பதிவானதாக, இதுவரையிலான தேர்தல் ஆணைய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இங்கு 74.06 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், மாநில சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் கடந்த 1987ம் ஆண்டு பதிவான 80.54 சதவிகிதம் என்பதே அதிகபட்ச வாக்குப்பதிவாக உள்ளது. நடப்பு தேர்தலுக்கான இறுதி தரவுகள் வெளியாகும்போது, பழைய சாதனை முறியடிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Elections 2026: புதுச்சேரி, அசாம், கேரளமில் சரித்திரம்- இதுவரை இல்லாத உச்சத்தில் வாக்குப்பதிவு ஏன்? காரணம் என்ன?

அதிகப்படியான வாக்குப்பதிவு எப்படி? ஏன்?

கேரளா மற்றும் அசாமில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒரே கட்சியே ஆண்டு வருகிறது. அவர்களின் மீதுள்ள அதிருப்தியையே பொதுமக்கள் தங்களது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. புதுச்சேரியில் முதல்முறையாக விஜய் தலைமையிலான தவெகவும் போட்டியிடுவதால், இளைஞர்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர் என கூறப்படுகிறது. அதேநேரம், மத்திய அரசு முன்னெடுத்த சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியலும், கூடுதல் வாக்குப்பதிவிற்கு பெரும்பாங்காற்றியுள்ளதாக கூறப்படுகிறது. போலி வாக்காளர்கள், இரட்டைப்பதிவுகள் மற்றும் மரணமடைந்தவர்களின் விவரங்கள் நீக்கப்பட்டதால், தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், வாக்குப்பதிவு சதவிகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதாக பாஜக தரப்பினர் பேசி வருகின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Embed widget