மேலும் அறிய

AIADMK Election Manifesto: அதிமுக-வின் "மெகா" தேர்தல் அறிக்கை: தமிழ்நாட்டை மாற்றப்போகும் 22 அதிரடி உட்கட்டமைப்பு வாக்குறுதிகள்!

AIADMK Election Manifesto 2026: தமிழ்நாட்டின் முகப்பை மாற்றும் வகையில் அதிமுகவின் தேர்தல் அறிவிப்பில் வெளியான உட்கட்டமைப்புக்கான தேர்தல் வாக்குறுதிகள் விவரங்களை காணலாம்.

சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன,  அந்த வகையில் தமிழ்நாட்டின் எதிர்க் கட்சியான அதிமுக 3 கட்டங்களாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது அதிமுக அலுவலகத்தில் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டு உட்கட்டமைப்பு துறைக்கு பல அதிரடி அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன

என்னென்ன அறிவிப்புகள்? 

  • தொலைத் தொடர்பு வசதிகளை மேம்படுத்த தமிழ் நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில், அனைவரும் பயன்பெறும் வகையில் இலவச WiFi வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
  • தூத்துக்குடி விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டு இரவு நேர விமான சேவை தொடங்கவும், சரக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தவும் மத்திய அரசை வலியுறுத்தப்படும்.
  • நாகப்பட்டினம் தூத்துக்குடி கன்னியாகுமரி நான்குவழி சாலைத் திட்டம் விரைவாக செயல்படுத்தப்படும்.
  • தமிழ் நாட்டிற்கு மத்திய அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை துரிதப்படுத்தவும். தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், தூத்துக்குடி, சென்னை துறைமுக விரிவாக்கத் திட்டங்கள், சென்னையில் இருந்து அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய வெளி நாடுகளுக்கு நேரடி விமானப் போக்குவரத்து. டில்லியில் இருந்து சென்னை வழியாக தூத்துக்குடி வரையிலான சரக்கு வழித் தடம் (Dedicated Fright Corridar) போன்ற திட்டங்களை விரைவாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • குளச்சல் துறைமுகம் மேம்படுத்தப்பட்டு, சரக்குப் பெட்டக இணைய வசதி ஏற்படுத்த மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அனைத்து மாநகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலை தவிற்க சுற்றுச் சாலைகள் (Ring Roads) அமைக்கப்படும்.
  • சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் தவிர்க்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
  • சென்னை வெள்ள தடுப்புப் பணிகள் முழுமையாகவும், முறையாகவும் நிறைவேற்றப்படும்.
  • சென்னை உள்ளிட்ட முக்கிய மாநகரப் பகுதிகளில் வாகன நிறுத்த தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் 'பன்னடுக்கு வாகன நிறுத்த வளாகங்கள் கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மத்திய அரசின் உதவியுடன் கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்தி செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
  • கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கோவை-பாலக்காடு சாலை சாலை, மதுக்கரை-மேட்டுப்பாளையம் சாலை, நரசிம்மநாயக்கன்பாளையம் வரையிலான மேற்கு புறவழிச் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
  •  கோவை-பாலக்காடு சாலை, மதுக்கரை, செட்டிபாளையம் பிரிவு முதல் அவிநாசி சாலையில் நீலாம்பூர் சந்திப்பு வரையிலான L&T பைபாஸ் நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றம் செய்யப்படும்.
  • அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த உயர்மட்ட மேம்பாலத்தினை அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் L&T பைபாஸ் சாலை சந்திப்பு வரை நீட்டிப்பு செய்து புதிய மேம்பாலம் அமைத்துத் தரப்படும்.
  • கோவையில் உள்ள திருச்சி செல்லும் சாலையில் இராமநாதபுரம் உயர்மட்ட மேம்பாலம் அருகிலிருந்து சிங்காநல்லூர் சந்திப்பு-ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
  • கோவை-பொள்ளாச்சி சாலை, L&T பைபாஸ் சாலை சந்திப்பில் (கற்பகம் கல்லூரி அருகில்) ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
  • தடாகம் சாலை, லாலி ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
  • கோவை-திருச்சி சாலை, செயிண்ட் மேரிஸ் பள்ளி அருகில் இருந்து துவங்கி லங்கா கார்னர்-இரயில் நிலைய சாலையில் காவல் ஆணையாளர் அலுவலகம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
  • சர்வதேச அணிகள் பங்குபெறும் வகையில் புதிய கிரிக்கெட் மைதானம் கோவையில் அமைக்கப்படும்.
  • கோவை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் (வெள்ளலூர்) கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
  • சிறுவாணி அணையை தூர்வாரி சீரமைக்கும் திட்டத்தை கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மத்திய அரசின் உதவியுடன் நிறைவேற்றப்படும்.
  • கோவையில் அகல இரயில் பாதை பணிகள் முடிவடைந்த நிலையில் இவ்வழித் தடத்தில் இயங்கி வந்த இரயில் சேவை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Embed widget