மேலும் அறிய

ABP C Voter Opinion Poll: குஜராத்தில் அனைத்தையும் வாரிய பாஜக; வட கிழக்கில் ஆச்சர்யமூட்டும் கணிப்பு முடிவுகள்

Lok Sabha Opinion Poll: குஜராத், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் ABP – சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ABP-C Voter Opinion Poll: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் தொடர்பாக ABP செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. 

மக்களவை தேர்தல்:

இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  

ஏற்கனவே, ABP செய்தி குழுமம் மற்றும் சி வோட்டர் இணைந்து, 3 முறை தேர்தல் முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இந்நிலையில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது 4வது முறையாக கருத்து கணிப்புகளை நடத்தி வெளியிட்டுள்ளன. இந்த தேர்தல் கணிப்பு முடிவுகளானது, மாநில வாரியாக கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

குஜராத்:

குஜராத் மாநிலத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 63 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணி 33.7 சதவிகித வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதர கட்சிகள் 3.3 சதவிகித வாக்குகளையும் பெறும் என கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இங்கு  26 தொகுதிகள் உள்ள நிலையில், அனைத்தையும் பாஜக கட்சி கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு  முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர்:

ஜம்மு காஷ்மீர்  ஒன்றிய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 47 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 44.9 சதவிகித வாக்குகளையும், PDP 7 சதவிகித வாக்குகளையும் இதர கட்சிகள் 1.1 சதவிகித வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.  

ஜம்மு காஷ்மீர்  ஒன்றிய பிரதேசத்தில் 5 தொகுதிகள் உள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சல் பிரதேசம்:

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 63 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 33.2 சதவிகித வாக்குகளையும், இதர கட்சிகள் 3.8 சதவிகித வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இங்கு 4 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில், பாஜக கட்சி கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மணிப்பூர்:

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இரண்டு இடங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் பாஜக கட்சி ஒரு தொகுதியிலும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேகாலயா:

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இரண்டு இடங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும், பாஜக கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சி ஒரு தொகுதியிலும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மிசோரம்:

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியை, ZPM கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நாகாலாந்து:

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியை NDPP கட்சி கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

திரிபுரா:

திரிபுரா மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளை பாஜக கட்சி கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சிக்கிம்:

சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியை பாஜக கூட்டணியில் உள்ள SKM கட்சி கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அருணாச்சல் பிரதேசம்:

அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளை  பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கருத்து கணிப்பு முறை:

சி வோட்டர் நடத்திய இந்தக் கருத்து கணிப்பானது, மார்ச் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டவையாகும். கருத்துக்கணிப்பானது வாக்களிக்க தகுதி உள்ளவர்களிடம்  நடத்தப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம். 

கருத்து கணிப்பின் எண்ணிக்கை அளவானது 3% முதல் 5% மாறுபாடு இருக்கலாம் எனவும், 95% நம்பிக்கைத்தன்மை கொண்டதாக இருக்கும் என சி வோட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Also Read: ABP C Voter Opinion Poll: பிரதமராக யார் வேண்டும்? மோடியா! ராகுலா; ஆச்சர்யமூட்டும் மக்களின் பதில்

தலைப்பு செய்திகள்

TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
Embed widget