மேலும் அறிய

Local body election | 25 ஆண்டுகளாக போட்டியின்றி வேட்பாளரை தேர்வு செய்யும் கிராமம்

பேராவூரணி அருகே பெருமகளூர் பேரூராட்சிக்குட்பட்ட 10-வது வார்டை சேர்ந்தவர்கள், ஒரு மனதாக ஒருவரை தேர்வு செய்து, பொது வேட்பாளராக அறிவித்து, அவரை வார்டு உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர் பேரூராட்சி 12 வார்டுகளை கொண்டது. பேரூராட்சி தேர்தலுக்காக 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதில், இருவரின் மனு தள்ளுபடியும், 7 பேர் வாபஸ் பெற்றனர். இந்த பேரூராட்சியில் 2170 ஆண் வாக்காளர்களும், 2397 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 4561 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில்,  5 ஆவது வார்டை சேர்ந்த திலகமும், 10 ஆவது வார்டை சேர்ந்த கல்யாணி ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 39 பேர் தேர்தலை சந்திக்கின்றனர். இதில், 10-வது வார்டு பகுதிகளான திரு.வி.நகர், பாரதி நகர், கென்னடி நகர், இந்திரா நகர் ஆகிய நான்கு நகரைச் சேர்ந்தவர்கள் அதிமுக கிளை செயலாளர் செல்லதுவை மனைவி கல்யாணி (55) என்பவரை பொது வேட்பாளராக அறிவித்தனர். இதையடுத்து அவர்  வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த வார்டில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், கல்யாணி  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Local body election | 25 ஆண்டுகளாக போட்டியின்றி வேட்பாளரை தேர்வு செய்யும் கிராமம்

இதுகுறித்து 10 வது வார்டு பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள நான்கு நகரை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி, ஒவ்வொரு தேர்தலின் போதும்,  கடந்த 25 ஆண்டுகளாக சுழற்சி முறையில் நான்கு நகரில் இருந்து ஒருவரை பொது வேட்பாளராக அரசியல் கட்சி சார்பின்றி நிறுத்துவோம். அந்த பொது வேட்பாளருக்கு எல்லோரும் ஆதரவு தெரிவிப்பதால், வேறு யாரும் போட்டியிடுவதில்லை. அதன்படி இம்முறை பாரதி நகரை சேர்ந்தவரும் அதிமுக கிளை செயலாளருமான செல்லத்துறை மனைவி கல்யாணி என்பவரை தேர்வு செய்துள்ளோம். இது போன்று  பல தேர்தல்களை நாங்கள் ஒற்றுமையாகவும், பகைமை இல்லாமலும், செலவு இல்லாமலும் போட்டியின்றி தேர்தலை சந்திதுள்ளோம்.

Local body election | 25 ஆண்டுகளாக போட்டியின்றி வேட்பாளரை தேர்வு செய்யும் கிராமம்

இந்த வார்டில் நான்கு வார்டுகளில் உள்ளவர்களுக்குள் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காக எங்கள் வார்டை சேர்ந்தவர்களே முடிவு செய்து, அதன் படி தேர்தலின் போது அடுத்தடுத்து வார்டில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்குவோம்.  இதனால் எங்கள் வார்டு பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள், நலத்திட்டங்கள் அனைத்து சரியாக வந்து சேர்ந்து விடும். உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், நான்கு நகர் மக்களை சமமாக கருதுவதால், கடந்த 25 ஆண்டுகளாக எந்தவிதமான அரசியல் சார்ந்த பிரச்சனைகளோ மற்ற எந்தவிதமான பிரச்சனைகளும் வந்ததில்லை. ஏழையாக இருந்தாலும், வசதிபடைத்தவர்களாக இருந்தாலும், எங்கள் நகர் மக்கள் தேர்ந்தெடுத்தால், அவர் தான் உறுப்பினர்.

Local body election | 25 ஆண்டுகளாக போட்டியின்றி வேட்பாளரை தேர்வு செய்யும் கிராமம்

தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் பின்னர் எந்த கட்சியை சேர்ந்தவர் யார் பேரூராட்சி தலைவராக வருகிறார்களோ, அவருக்கு ஆதரவை அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒற்றுமையாக இருப்பதால், எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நாங்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டு நிவர்த்தி செய்து வருகிறோம் என்றனர்.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget