TN 10th Result 2025: மாணவர்களே... 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு; எப்படி காணலாம்?
Tamil Nadu 10th Result 2025 Date: மாநிலக் கல்வி வாரியத்தில் படித்த 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu 10th Result 2025 Date: 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதை எப்படிக் காணலாம்? பார்க்கலாம்.
10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ் மொழிப் பாடத்துடன் தொடங்கிய தேர்வு, சமூக அறிவியல் தேர்வுடன் முடிவு பெற்றது. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 தொடங்கி 28 ஆம் தேதி நிறைவு பெற்றன.
தேர்வு முடிவு வெளியாகும் தேதி இதோ!
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 21ஆம் தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. இவர்களுக்கான தேர்வு முடிவுகளும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளும் மே 19ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியாக உள்ளன. இதை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
எப்படி முடிவுகளைக் காண்பது?
மாணவர்கள் தங்களின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதேபோல பள்ளிகளுக்குச் சென்றும் அறிந்துகொள்ளலலாம்.
அதேபோல பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது?
அதேபோல சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்கீழ் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதிக்குள் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15 முதல் மார்ச் 18ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வை சுமார் 44 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இந்தத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளத்தில் சென்று தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் டிஜி லாக்கர் செயலி, குறுஞ்செய்தி ஆகியவை மூலம் 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைக் காண முடியும்.
கூடுதல் தகவல்களுக்கு: tnresults.nic.in, dge.tn.gov.in


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

