Silent Letters: “Bomb” என்பதை பாம் என்றுதான் அழைக்க வேண்டும்...ஏன் பாம்ப் கூடாது தெரியுமா?
Silent Letters: ஆங்கில வார்த்தைகளில் சில எழுத்துக்கள் சில இடங்களில் ஓசையை இழந்து காணப்படுகிறது.
ஆங்கிலத்தில் வார்த்தைகளை சொல்லும்போது, வாசிக்கும் போது இருவேறு உச்சரிப்பு முறை வரும். அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக சைலண்ட் லெட்டர் என அழைக்கப்படும் சில எழுத்துகள் முக்கியமாக பார்க்கப்படுகிறது. சைலண்ட் எழுத்துகளை சரியாக கையாளும் போது, நாம் சரியான உச்சரிப்பு முறையை தெரிந்து கொள்ளலாம். அது என்ன சைலண்ட் லெட்டர், அதை சரியாக எப்படி கையாள்வது குறித்து தெரிந்து கொள்வோம்.
சைலண்ட் லட்டர்:
சைலண்ட் லெட்டர் என்பது, தனது எழுத்துக்கு உரிய ஓசை இழந்து காணப்படும். அதாவது, ஒரு வார்த்தையில் அந்த எழுத்து இருக்கும், ஆனால் அதன் ஓசையை பயன்படுத்தாமல் வார்த்தையை உச்சரிப்போம். உதாரணத்திற்கு Talk என்ற வார்த்தையை டாக் என்றுதான் அழைக்கிறோமே தவிர டால்க் என்று அழைப்பதில்லை. இங்கு ( ல் ) L என்ற எழுத்தை பயன்படுத்துவதில்லை. ஏன் இப்படி பயன்படுத்துகிறோம், எங்கெல்லாம், எந்த எழுத்து ஓசையை இழந்துவரும் என்பது குறித்து எழுத்துவாரியாக தெரிந்து கொள்வோம்.
A எழுத்து:
A எழுத்து எப்பொழுது ஓசையின்றி வருகிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம். Lly என்ற எழுத்துகளுக்கு முன்பு A வரும்போது ஓசையை இழந்து வரும்.
உதாரணத்திற்கு romantically என்பதை ரொமாண்டிக்ளி என்று உச்சரிக்க வேண்டுமே தவிர ரொமாண்டிக்களி என்று உச்சரிக்கக் கூடாது. அதே போல musically என்பதை மியூசிக்ளி என்றும் logically என்பதை லாஜிக்ளி என்றும் அழைக்க வேண்டும்.
B எழுத்து
B எழுத்து எப்பொழுது ஓசையின்றி வருகிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்
M என்ற எழுத்துக்கு பின்பு B வரும்போது, B தனது ஓசையை இழந்து வரும். உதாரணத்திற்கு Bomb என்பதை பாம் என்று அழைக்க வேண்டுமே தவிர பாம்ப் என்று அழைக்க கூடாது, ப் சேர்த்து வர கூடாது. Plumber என்பதை பிளமர் என்றும் Comb என்பதை காம் என்றும் lamb என்பதை லேம் என்றுதான் அழைக்க வேண்டும்.
C எழுத்து:
C எழுத்து எப்பொழுது ஓசையின்றி வருகிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம். S என்ற எழுத்துக்கு பின்பு C வரும்போது, C தனது ஓசையை இழந்து வரும். உதாரணத்திற்கு Scene என்பதை சீன் என்றுதான் அழைக்க வேண்டும் ஸ்கீன் என்று அழைக்கக் கூடாது. Obscene என்பதை அப்சீன் என்றும் Scenario சினாரியோ என்றுதான் அழைக்க வேண்டும்.
இதுபோன்ற அடுத்தடுத்து எழுத்துக்களுக்கான சைலண்ட் லட்டர் உபயோகத்தை அடுத்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
Also Read :Largest Lizards: மனிதர்களை விட மிகப்பெரிய டாப் 10 பல்லி இனங்கள்! எங்கே இருக்கிறது?