மேலும் அறிய

Viksit Bharat Buildathon: ரூ.1 கோடி பரிசுத்தொகை; பள்ளி மாணவர்கள் விக்சித் பாரத் பில்டத்தானுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

Viksit Bharat Buildathon 2025: விக்சித் பாரத் பில்டத்தானில் மொத்தம் 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே படைப்புச் சிந்தனையையும், சுயசார்பையும் ஊக்குவிக்கும் நோக்குடன் நடத்தப்படும் விக்சித் பாரத் பில்டத்தான் 2025 க்கான பதிவு இன்று (அக்டோபர் 11, 2025) முடிவடைகிறது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் உள்ள பள்ளிகள் மூன்று முதல் ஐந்து மாணவர்கள் கொண்ட குழுக்களை அமைக்கலாம். பங்கேற்கும் குழுக்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.

நேரடி ஒளிபரப்பு

இந்த புதுமையான நிகழ்வு அக்டோபர் 13 அன்று நடைபெற உள்ளது. இது நாடு முழுவதும் vbb.mic.gov.in அல்லது schoolinnovationmarathon.org/registration ஆகிய அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

பில்டத்தானில் மொத்தம் 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை 10 தேசிய அளவிலான வெற்றியாளர்கள், 100 மாநில அளவிலான வெற்றியாளர்கள் மற்றும் 1,000 மாவட்ட அளவிலான வெற்றியாளர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும்.

பில்டத்தான் நான்கு தேசிய கருப்பொருள்களைக் கொண்டுள்ளது. அவை என்னென்ன?

  • ஆத்ம நிர்பர் பாரத்: சுயசார்புள்ள அமைப்புகள் மற்றும் தீர்வுகளை உருவாக்குதல்.
  • சுதேசி: உள்நாட்டு யோசனைகள் மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல்.
  • வோக்கல் ஃபார் லோக்கல்: உள்ளூர் தயாரிப்புகள், கைவினைப்பொருட்கள் மற்றும் வளங்களை மேம்படுத்துதல்.
  • சம்ரித்தி: செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான வழிகளை உருவாக்குதல்.

மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள் தாங்கள் தீர்க்க விரும்பும் பிரச்சனை, உருவாக்கப்பட்ட புதுமையான தீர்வு அல்லது முன்மாதிரி, அதன் செயல்பாடு மற்றும் அவர்களின் யோசனையின் சாத்தியமான தாக்கம் குறித்து 2 முதல் 5 நிமிட வீடியோவை உருவாக்க வேண்டும். இந்த வீடியோவை அக்டோபர் 13 முதல் அக்டோபர் 31 வரை சமர்ப்பிக்க வேண்டும். வெற்றியாளர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: vbb.mic.gov.in

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மீண்டும் மீண்டுமா? திருக்குறளை பாதியில் மறந்த அமைச்சர் விஸ்வநாதன்- பரபரப்பு வீடியோ
மீண்டும் மீண்டுமா? திருக்குறளை பாதியில் மறந்த அமைச்சர் விஸ்வநாதன்- பரபரப்பு வீடியோ
புதுச்சேரி: மொபைல் ஆப்பில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு - புதிய வசதி அறிமுகம்!
புதுச்சேரி: மொபைல் ஆப்பில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு - புதிய வசதி அறிமுகம்!
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
காது கேளாத, வாய் பேச இயலாத இளைஞரா நீங்கள்? உங்களுக்காகவே காத்திருக்கிறது சென்னை கிண்டி அரசு ஐ.டி.ஐ!
காது கேளாத, வாய் பேச இயலாத இளைஞரா நீங்கள்? உங்களுக்காகவே காத்திருக்கிறது சென்னை கிண்டி அரசு ஐ.டி.ஐ!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
Embed widget