மேலும் அறிய

Vijayadasami 2022: விஜயதசமி நாளில் அரசுப்பள்ளிகளில் களைகட்டும் மாணவர் சேர்க்கை..

விஜயதசமி நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை களைகட்டி வருகிறது.

விஜயதசமி நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை களைகட்டி வருகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் வந்து, மாணவர் சேர்க்கையைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொதுமுடக்கமும், பொருளாதார பாதிப்பும் ஏராளமானோரை அரசுப் பள்ளிகள் நோக்கி ஈர்த்தது, இந்த நிலையில் இன்று அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஆயுத பூஜையும், விஜய தசமியும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகைகளில் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை கொண்டாடப்படும் அடுத்த நாள் விஜய தசமி கொண்டாடப்படுகிறது. விஜயதசமி தினத்தன்று புதிய காரியங்களை தொடங்கினால் அமோகமாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கையாக கடைப்பிடிக்கப்படுகிறது.

குறிப்பாக, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை முதன்முதலாக விஜயதசமி நாளில் பள்ளிகளில் சேர்த்தால், அவர்கள் படிப்பில் மிகச்சிறந்தவர்களாக விளங்குவார்கள் என்று நம்புகின்றனர். இதனால், விஜய தசமியன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளில் விஜய தசமி தினத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், அரசுப் பள்ளிகளிலும் அண்மைக் காலமாக மாணவர் சேர்க்கையை அரசு நடத்தி வருகிறது. 

இதன்படி, விஜய தசமியான இன்று அரசுப் பள்ளிகளில்  எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் 1ஆம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்த அரசு உத்தரவு பிறப்பிட்டது. அதேபோல ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியராவது கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குநரகம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.



Vijayadasami 2022: விஜயதசமி நாளில் அரசுப்பள்ளிகளில் களைகட்டும் மாணவர் சேர்க்கை..

மழலையர்களை வரவேற்ற ஆசிரியர்கள் 

இதையடுத்து, விஜய தசமியான இன்று (அக்டோபர் 5ஆம் தேதி) அரசுப் பள்ளிகளில்  எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் 1ஆம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இனிப்பு, மலர்கள், எழுதுகோல், சிலேட்டு ஆகியவற்றைத் தந்து ஆசிரியர்கள் மழலையர்களை வரவேற்றனர்.

ஆண்டுதோறும் விஜய தசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவை அளிக்கும் வகையில் நெல்லில் ’அ’ எழுதும் வித்யாரம்பம் நிகழ்வு, கோயில்களில் விமரிசையாக நடத்தப்பட்டு வருவதும் நினைவுகூரத்தக்கது.

இதையும் வாசிக்கலாம்:

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் https://tamil.abplive.com/education/school-education-department-orders-that-special-classes-should-not-be-held-during-quarterly-exam-holidays-77022

MBBS, BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ்: கலந்தாய்வு, வகுப்புகள் தொடங்கும் தேதிகள் அறிவிப்பு.. இதை செக் பண்ணுங்க..
https://tamil.abplive.com/education/mbbs-bds-counselling-classes-start-dates-mcc-announcement-know-in-detail-77044

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அமைதி காக்கும் ஆசிரியர் வாரியம்; உதவிப்பேராசிரியர் தேர்வு முடிவு குளறுபடிக்கு தீர்வு எப்போது?
அமைதி காக்கும் ஆசிரியர் வாரியம்; உதவிப்பேராசிரியர் தேர்வு முடிவு குளறுபடிக்கு தீர்வு எப்போது?
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
TRB உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் ஏகப்பட்ட குளறுபடி... கண்ணீர் வடிக்கும் தேர்வர்கள் !
TRB உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் ஏகப்பட்ட குளறுபடி... கண்ணீர் வடிக்கும் தேர்வர்கள் !
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay IAS and IPS Conference : இனி ஒரு குற்றமும் நடக்க கூடாது.! இன்று IAS, IPS அதிகாரிகள் மாநாடு- செம பிளானோடு சிஎம் விஜய்
இனி ஒரு குற்றமும் நடக்க கூடாது.! இன்று IAS, IPS அதிகாரிகள் மாநாடு- செம பிளானோடு சிஎம் விஜய்
DMK PROTEST : விஜய் அரசுக்கு எதிராக திமுகவின் முதல் போராட்டத்திற்கு செக்.! தடை விதித்த போலீஸ்- காரணம் என்ன.?
விஜய் அரசுக்கு எதிராக திமுகவின் முதல் போராட்டத்திற்கு செக்.! தடை விதித்த போலீஸ்- காரணம் என்ன.?
MK Stalin: மாற்றி மாற்றி பேசி புலம்பும் EX CM ஸ்டாலின்..! ஆற்றாமையா? உ.பிக்களுக்கான ஊக்கமா? தவெக அரசு
மாற்றி மாற்றி பேசி புலம்பும் EX CM ஸ்டாலின்..! ஆற்றாமையா? உ.பிக்களுக்கான ஊக்கமா? தவெக அரசு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
Toyota Corolla Cross: மஹிந்த்ரா XUV 7XO-விடம் பந்தயம் அடிக்குமா? டொயோட்டாவின் புதிய 7 சீட்டர் - ஹைப்ரிட், 24KM மைலேஜ்
மஹிந்த்ரா XUV 7XO-விடம் பந்தயம் அடிக்குமா? டொயோட்டாவின் புதிய 7 சீட்டர் - ஹைப்ரிட், 24KM மைலேஜ்
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
Recreation Club fees hike : கிளப் மதுக்கூட கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.! 15 லட்சம் டூ 30 லட்சமாக அதிகரிப்பு- வெளியானது அரசிதழ்
கிளப் மதுக்கூட கட்டணம் அதிரடியாக உயர்ந்தது.! 15 லட்சம் டூ 30 லட்சமாக அதிகரிப்பு- வெளியானது அரசிதழ்
Embed widget