MK Stalin Assembly Speech | பல்கலை. துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் அதிரடி
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
![MK Stalin Assembly Speech | பல்கலை. துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் அதிரடி University Vice Chancellor appointment by Tamil Nadu Govt- Says CM MK Stalin TN Assembly session 2022 MK Stalin Assembly Speech | பல்கலை. துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் அதிரடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/06/5008b4694245f583ab066c68a8429a97_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில், ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராகப் பதவி வகிக்கும் பொறுப்புக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. இதன்படி பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில ஆளுநரே நேரடியாக நியமிப்பதற்கு பதிலாக, மாநில அரசு பரிந்துரைக்கும் நபர்களில் இருந்து ஒருவரை ஆளுநர் தேர்வு செய்ய வேண்டும். இதற்கான மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அரசாளும் பிராந்தியக் கட்சிகள், மாநில சுயாட்சி என்று முழக்கமிட்டு வரும் நிலையில், இந்த மசோதா முக்கியமான நகர்வாகப் பார்க்கப்பட்டது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு கடந்த அரை நூற்றாண்டு காலமாக இருந்து வரும் நிலையில், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உயர் கல்வியில் ஆளுநரின் அதிகாரம் குறித்த விவாதம் மீண்டும் பேசும் பொருளானது.
மகாராஷ்டிர மாநிலத்தின் மசோதாவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் புதிய திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
முன்னதாக அதிமுக ஆட்சிக் காலத்தில், காந்திராம கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக எஸ்.மாதேஸ்வரன் மற்றும் கால்நடை பல்கலைக்கழகத் துணைவேந்தராக டாக்டர் செல்வகுமார் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் ஆளுநருக்கு இத்தனை அவசரம் அழகல்ல என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
மார்ச் மாதம் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி சட்டப்பேரவையில் கேட்ட கேள்விக்கு முதல்வர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். இதன்மூலம் ஆளுநரின் அதிகாரம் குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வழக்கமான நடைமுறை என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)