மேலும் அறிய

படிக்காமல் பட்டம்: 117 பேர் முடிவுகள் ரத்து.. சென்னை பல்கலைக்கழகம் எடுத்த அதிரடி ஆக்ஷன்!

படிக்காமலே பட்டம் பெற முயன்ற 117 பேர் முடிவுகள் ரத்து செய்து சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

எந்த பட்டப்படிப்பிலும் சேராமல் ஆன்லைன் தேர்வு வாயிலாக தேர்வு எழுதி பட்டம் பெற முயன்ற 117 பேரின் முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 1980 ம் ஆண்டு முதல் அரியர் வைத்தவர்கள் தேர்வெழுத 2020 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிறப்பு வாய்ப்பை பயன்படுத்தி இந்த மோசடி நடைபெற்றதாகவும், தொலைத்தூர கல்வி நிறுவனங்கள் தலா ரூ. 3 லட்சம் வரை பெற்றுக்கொண்டு உதவியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் முன்னர் செமஸ்டர் கட்டணம், பருவத் தேர்வு கட்டணம் கட்டிவிட்டார்களா என்று சோதனை மேற்கொண்டபோது, இந்த மோசடி வெளியானதாக கூறப்படுகிறது.  இதுபோல், வேறுயாரும் பட்டம் பெற முயற்சி செய்து இருக்கிறார்களா என்ற அடிப்படையில் ஆய்வு நடத்த விசாரணைக்குழு அமைத்து துணைவேந்தர் கௌரி உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக, கடந்த 2019 ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியில் அரியர் வைத்திருப்பவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்தது. அதில், கடந்த 1980 ம் ஆண்டு முதல் அரியர் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 2019, மே 2020 ஆகிய பருவத் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்றுக்கொள்ள கடைசி வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம் என்றும்,  சிறப்புத் தேர்வு மூலம் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உடனடியாக பட்டம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க : Koozhangal Oscars 2022: ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய கூழாங்கல்... விக்னேஷ் சிவன் அப்செட் பதிவு!

மேலும், பட்டப்படிப்பில் இருந்து விலக நினைக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் தேர்ச்சி பெற்ற பாடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் சான்றிதழோ அல்லது பட்டயச் சான்றிதழோ வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. அதேபோல், முதுநிலைப் படிப்பில் இடைநிற்கும் மாணவர்களுக்கு முதுநிலை பட்டய சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

சுற்றுலா சென்ற இடத்தில் ஆயுத பயிற்சி என பதிவிட்ட நபர்: சிறுமலை வழக்கு பெருமலையாய் வெடித்து நீதிபெற்ற தருணம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

‛ஆசிர்வாதம் பண்ணுங்க ஆண்ட்டி...’ -பாட்டிக்கு ‛பாயாசம்’ போட்டு நகையை லபக்கிய பாசக்கார பெண் கைது!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

‛ஆனாலும் இவ்வளவு ஸ்ட்ரிக்ட் கூடாது’ தென் கொரியா பட சி.டிக்கள் விற்பனை: 7 பேரை சுட்டுக்கொன்ற வட கொரியா!

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
David Warner: செம்ம! நடிகராக அறிமுகமாகும் டேவிட் வார்னர்.. என்ன படம்? யாரு ஹீரோ தெரியுமா?
David Warner: செம்ம! நடிகராக அறிமுகமாகும் டேவிட் வார்னர்.. என்ன படம்? யாரு ஹீரோ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram News | செம்மண் குவாரி ஊழல்அத்துமீறிய பாமக நிர்வாகி கண்டுகொள்ளாத கனிமவளத்துறைAnnamalai SP Velumani | அ.மலைக்கு ராஜ மரியாதை!மீண்டும் துளிர்க்கும் கூட்டணி?கடும் அப்செட்டில் EPSNainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!Dad Son Ear Piercing Ceremony : ’’அப்பாவுக்கும் காது குத்தனும்’’அடம்பிடித்த சிறுவன்ஆசையை நிறைவேற்றிய தந்தை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
David Warner: செம்ம! நடிகராக அறிமுகமாகும் டேவிட் வார்னர்.. என்ன படம்? யாரு ஹீரோ தெரியுமா?
David Warner: செம்ம! நடிகராக அறிமுகமாகும் டேவிட் வார்னர்.. என்ன படம்? யாரு ஹீரோ தெரியுமா?
Trump AI Video Viral: அறியா வயது முதல் அதிபர் வரை.. வைரலாகும் ட்ரம்ப் குறித்த அசத்தலான ஏஐ வீடியோ...
அறியா வயது முதல் அதிபர் வரை.. வைரலாகும் ட்ரம்ப் குறித்த அசத்தலான ஏஐ வீடியோ...
IND vs AUS: சுழட்டி.. சுழட்டி.. பந்துபோடும் இந்தியா.. திணறி திணறி ஆடும் ஆஸ்திரேலியா! இதாம்ல அட்டாக்!
IND vs AUS: சுழட்டி.. சுழட்டி.. பந்துபோடும் இந்தியா.. திணறி திணறி ஆடும் ஆஸ்திரேலியா! இதாம்ல அட்டாக்!
China Vs America Tariffs: வகை வகையாக பிரித்து அடிக்கும் சீனா.. அப்செட்டான அமெரிக்கா...
வகை வகையாக பிரித்து அடிக்கும் சீனா.. அப்செட்டான அமெரிக்கா...
IND vs AUS: இந்தியாவிற்கு எதிராக இந்தியரை இறக்கிய ஆஸ்திரேலியா! யார் இந்த தன்வீர்சங்கா?
IND vs AUS: இந்தியாவிற்கு எதிராக இந்தியரை இறக்கிய ஆஸ்திரேலியா! யார் இந்த தன்வீர்சங்கா?
Embed widget