MSc Climate Change: சுகாதாரம், காலநிலை மாற்றப் படிப்பு; வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்- எப்படி?
MSc Health And Climate Change: லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹல் பல்கலைக்கழகத்தில், எம்எஸ்சி சுகாதாரம், காலநிலை மாற்றம் குறித்த படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
![MSc Climate Change: சுகாதாரம், காலநிலை மாற்றப் படிப்பு; வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்- எப்படி? University of Hull Invites Applications For MSc Health And Climate Change MSc Climate Change: சுகாதாரம், காலநிலை மாற்றப் படிப்பு; வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்- எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/28/6c5e11497c081cb7dc812050f354fc2b1693206589779332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹல் பல்கலைக்கழகத்தில், எம்எஸ்சி சுகாதாரம், காலநிலை மாற்றம் குறித்த படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாணவர்கள் வரும் அக்டோபர் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்.
2024 ஜூன் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஹல் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்பு காலநிலை மாற்றத்தின் நோக்கத்தை ஆராயவும், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளில் அதன் சாத்தியமான விளைவுகளை ஆய்வு செய்யவும் மாணவர்களுக்கு உதவுகிறது. குறிப்பாக, இதய நோய், கொசு, கிருமிகளால் உள்ளிட்டவற்றால் மனிதர்களுக்கும் விலங்களுக்கும் ஏற்படும் நோய்களான சிக்கன் குனியா, டெங்கு, மஞ்சள் காமாலை, ஜிகா வைரஸ், மலேரியா, நோய் எதிர்ப்பு சக்தி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றவை குறித்தும் இந்தப் படிப்பில் படிக்கலாம்.
இந்த முதுநிலைப் படிப்பு செப்டம்பர் 2024 முதல் செப்டம்பர் 2025 வரை ஓராண்டுக்கு நடைபெறும்.
தகுதி என்ன?
* இந்தப் படிப்பில் சேர, ஒரு பட்டப் படிப்பு தேர்ச்சி கட்டாயம். அதில் 50 முதல் 60 சதவீத மதிப்பெண்கள் (2:2 honours degree) அவசியம். அல்லது சுகாதார அறிவியல், மருத்துவம், பொது சுகாதாரம், உயிரியல், மருத்துவ அறிவியல் ஆகிய படிப்புகள் சார்ந்து ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
* சுகாதார வழங்குநர், உள்ளூர், பிராந்திய அல்லது தேசிய பொது சுகாதாரத் துறை, மருத்துவ அமைப்பு, மருந்தகம், தடுப்பூசி மையம், ஆம்புலன்ஸ் சேவைகள், மருத்துவ அல்லது (உயிர்) மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகம், தேசிய சுகாதார அமைப்பு, பொது சுகாதாரத் தரவு/ பயோ இன்ஃபர்மேடிக்ஸ் பகுப்பாய்வு குழு, மருத்துவத் தொண்டு நிறுவனம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அனுபவம்.
* முழுநேர வேலை அனுபவமும் தேவைக்கேற்பக் கருத்தில் கொள்ளப்படும்.
என்ன வேலைவாய்ப்பு?
* எம்எஸ்சி சுகாதாரம், காலநிலை மாற்றம் குறித்த படிப்பு முடித்த பட்டதாரிகள், சுற்றுச்சூழல் மற்றும் மனித உடல்நலம் சார்ந்த துறைகளில் வேலை பார்க்கலாம்.
* உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் பணிகளில் ஈடுபடலாம்.
* சர்வதேச நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றலாம்.
* சூழல் தணிப்பு மற்றும் பின்பற்றல் கொள்கைகள் (mitigation and adaptation policies) சார்ந்து, உள்ளூர் மற்றும் பிராந்திய அதிகாரிகளுடன் பணிபுரியலாம்.
* ஐக்கிய நாடுகள் மற்றும் உலக சுகாதார நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரியலாம்.
முக்கியத் தேதிகள் என்ன?
ஹல் பல்கலைக்கழகத்தில், எம்எஸ்சி சுகாதாரம், காலநிலை மாற்றம் (MSc Health And Climate Change) குறித்த முதுகலைப் படிப்பு படிக்க மாணவர்கள் வரும் அக்டோபர் மாதம் முதல் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் விருப்பமும் உள்ளோர், 2024 ஜூன் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஹல் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.hull.ac.uk/study/postgraduate/taught/health-and-climate-change-msc
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)