மேலும் அறிய

UGC NET 2023: யுஜிசி நெட் தேசிய தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க நாளையே கடைசி!- எப்படி?

கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வான யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே ( அக்.31ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும்.

கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வான யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே ( அக்.31ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும். முன்னதாகத் தேர்வுக்கான நெட் தேர்வின் விண்ணப்ப அவகாசம் அக்.28ஆம் தேதியில் இருந்து அக்.31ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant Professor) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. 

ஜூன் மாத அமர்வு

2023ஆம் ஆண்டுக்கான ஜூன் மாத உதவிப் பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. தேசிய தகுதித் தேர்வு, ஜூன் 13 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து டிசம்பர் மாத அமர்வுக்கான தேசியத் தகுதித் தேர்வு டிசம்பர் 6 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் மாணவர்கள் தங்களின் அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இதற்குத் தேர்வர்கள் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். அன்று தொடங்கிய விண்ணப்பப் பதிவு, அக்டோபர் 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவு பெறுவதாக இருந்தது. எனினும் மாணவர்கள் நலன் கருதி  விண்ணப்ப அவகாசம் அக்.28ஆம் தேதியில் இருந்து அக்.31ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது.

தொடர்ந்து மாணவர்கள் நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். நவம்பர் கடைசி வாரத்தில் அனுமதிச் சீட்டை மாணவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பக் கட்டணம்

பொதுப் பிரிவினருக்கு - ரூ.1,150
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்/ ஓபிசி (க்ரீமி லேயர் அல்லோதோர்) - ரூ.600
எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளி/ மூன்றாம் பாலினத்தவர் - ரூ.325

UGC NET December 2023 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் ugcnet.nta.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம் ஆகும். 

* முகப்புப் பக்கத்தில் UGC NET December 2023 Registration open - Click Here என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

* புதிதாக ஒரு பக்கம் தோன்றும். அதில் பதிவு செய்து, கேட்கப்படும் தகவல்களைப் பூர்த்தி செய்யவும். 

* தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்த பிறகு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். 
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.

* அதேபோல தேர்வர்கள் https://ugcnet.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்தும் விண்ணப்பிக்கலாம். 

விவரங்களை முழுமையாகக் காண https://ugcnet.nta.ac.in/images/public-notice-ugc-net-december-2023-for-application.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

கணினி வழியில் ஆன்லைன் மூலம் நடைபெறும் தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in , என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

இ- மெயில் முகவரி: ugcnet@nta.ac.in 

தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
Breaking News LIVE: மே 21 ஆம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
Breaking News LIVE: மே 21 ஆம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
TN 11th Exam Results 2024: +1 தேர்வு முடிவுகள் - 592 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த மாணவி - சென்னை அரசு பள்ளிகள் நிலவரம்
TN 11th Exam Results 2024: +1 தேர்வு முடிவுகள் - 592 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த மாணவி - சென்னை அரசு பள்ளிகள் நிலவரம்
Lok Sabha Election: 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் - எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில்? ராகுல் டூ ஸ்மிருதி
Lok Sabha Election: 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் - எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில்? ராகுல் டூ ஸ்மிருதி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
Breaking News LIVE: மே 21 ஆம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
Breaking News LIVE: மே 21 ஆம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
TN 11th Exam Results 2024: +1 தேர்வு முடிவுகள் - 592 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த மாணவி - சென்னை அரசு பள்ளிகள் நிலவரம்
TN 11th Exam Results 2024: +1 தேர்வு முடிவுகள் - 592 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த மாணவி - சென்னை அரசு பள்ளிகள் நிலவரம்
Lok Sabha Election: 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் - எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில்? ராகுல் டூ ஸ்மிருதி
Lok Sabha Election: 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் - எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில்? ராகுல் டூ ஸ்மிருதி
11th Result Subject Wise: கம்யூட்டர் சயின்ஸ் தான் டாப்.. பிளஸ் 1 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி விகிதம் இதோ!
கம்யூட்டர் சயின்ஸ் தான் டாப்.. பிளஸ் 1 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி விகிதம் இதோ!
11th Result District Wise: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; முதல், கடைசி இடத்தில் எந்த மாவட்டங்கள் தெரியுமா?
11th Result District Wise: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; முதல், கடைசி இடத்தில் எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Suchithra: ”அந்த கூட்டம் தான் காரணம்” -  சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் தனுஷை கிழித்தெடுத்த பாடகி சுசித்ரா..
”அந்த கூட்டம் தான் காரணம்” - சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் தனுஷை கிழித்தெடுத்த பாடகி சுசித்ரா..
90ஸ் கிட்ஸ் ரியூனியன்: மதுரையில் அசர வைத்த அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு !
90ஸ் கிட்ஸ் ரியூனியன்: மதுரையில் அசர வைத்த அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு !
Embed widget