மேலும் அறிய

UGC NET result 2022: இன்று வெளியாகும் யுஜிசி நெட் தேர்வு முடிவுகள்? பார்ப்பது எப்படி? விவரம்

யு.ஜி.சி. நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத அமர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

யு.ஜி.சி. நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத அமர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. 

கொரோனா தொற்று காரணமாக தள்ளிப்போன 2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட் தேர்வு) ஒரேகட்டமாக (December 2021 and June 2022 (Merged Cycles)) நடத்தப்பட்டது. 2021 டிசம்பர் தேர்வுகள் 08, 09, 11, 12 ஜூலை 2022 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதற்கிடையே 2022 ஜூன் தேர்வுகள் ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்து செப்டம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் அக்டோபர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டு, இறுதியாக அக்டோபர் 8, 10, 11, 12, 13 மற்றும் 14, ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது.

இதையடுத்து யு.ஜி.சி. நெட்  தேர்வின் நான்காவது நிலை தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பு அக்டோபர் 24ஆம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து, ரூ.200 செலுத்தி, விடைகளை ஆட்சேபனை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், யுஜிசி நெட் தேர்வின் (University Grants commission- National Eligibility Test -(ugc net))  2021 டிசம்பர், 2022 ஜூன் மாத அமர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

UGC NET result 2022: இன்று வெளியாகும் யுஜிசி நெட் தேர்வு முடிவுகள்? பார்ப்பது எப்படி? விவரம்

பார்ப்பது எப்படி?

தேர்வர்கள் www.nta.ac.in என்ற இணைய தளத்துக்குச் சென்று, அதில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு, நெட் தேர்வு முடிவுகளைக் காணலாம். 

கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in , ugcnet@nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டும் தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.  

தேர்வர்கள் தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in

மேலும் வாசிக்க..

UGC On Women's Safety: கல்லூரிகளில் மாணவிகள் பாதுகாப்பு; கருத்து கேட்டு புதிய விதிகளை உருவாக்கும் யுஜிசி!

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
100% தேர்ச்சி தான் டார்கெட்; லீவு போடும் மாணவர்களைக் கண்காணியுங்கள்! - கல்வித்துறையினருக்கு கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!
100% தேர்ச்சி தான் டார்கெட்; லீவு போடும் மாணவர்களைக் கண்காணியுங்கள்! - கல்வித்துறையினருக்கு கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
US Iran War: ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Nothing Phone 4b Vs 4a: இதுக்கு ஒன்னு, அதுக்கு ஒன்னு.! பெரிய பேட்டரி.! பெஸ்ட் கேமரா.! 4b, 4a என 2 போன்களை இறக்கிய Nothing
இதுக்கு ஒன்னு, அதுக்கு ஒன்னு.! பெரிய பேட்டரி.! பெஸ்ட் கேமரா.! 4b, 4a என 2 போன்களை இறக்கிய Nothing
Tata Sierra EV Delivery: ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
Embed widget