Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
ஆதிதிராவிடர், பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிட கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை 15 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலா தவெக அரசு நடந்து வருகிறது. முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தவெக அரசு மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.
கல்வி உதவித்தொகை உயர்வு:
தவெக ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறைக்கு சமூக நீதித்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அந்த துறைக்கு அமைச்சராக கூட்டணி கட்சியான விசிக-வின் எம்எல்ஏ வன்னிஅரசு செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில், தவெக அரசு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைய உயர்த்தியுள்ளது.
அதாவது, கல்லூரியில் இளங்கலையான பிஏ படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 1350ல் இருந்து கல்வி உதவித்தொகை ரூபாய் 11 ஆயிரத்து 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பி.காம், பி.காம் (ஹான்ஸ்), பி.எஸ்.சி, படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூபாய் 2 ஆயிரத்து 850ல் இருந்து ரூபாய் 11 ஆயிரத்து 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பிபிஏ படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 4 ஆயிரத்து 750 கல்வி உதவித்தொகை ரூபாய் 11 ஆயிரத்து 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
உண்மையான சமூக நீதி அரசு
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 15, 2026
சமூகநீதித்துறை என்று பெயர் மாற்றப்பட்டது வெறும் பெயரளவுக்கல்ல, உண்மையான மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவருவதற்கே என்று மீண்டும் நிரூபித்திருக்கிறது வெற்றித் தலைவரின் அரசு.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான… pic.twitter.com/LqZ8W1ZDaT
எம்.காம், எம்.எஸ்.சி, படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரத்து 850ல் இருந்து ரூபாய் 12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
15 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சமூக நீதி அரசு:
தமிழக அரசின் இந்த கல்வி உதவித்தொகை உயர்வு குறித்து தவெக பதிவிட்டுள்ளதாவது, உண்மையான சமூக நீதி அரசு. சமூகநீதித்துறை என்று பெயர் மாற்றப்பட்டது வெறும் பெயரளவுக்கல்ல, உண்மையான மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வருவதற்கே என்று மீண்டும் நிரூபித்திருக்கிறது வெற்றித் தலைவரின் அரசு.
கல்வி உதவித்தொகை உயர்வு:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் தலைமையிலான அரசு உயர்த்தியுள்ளது.
மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு:
மனசாட்சியுள்ள மக்களாட்சி நடத்தும் வெற்றித் தலைவரின் நல்லாட்சியின் நடவடிக்கையால், இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளின் பட்டியலில், புதியதாக 11 இளங்கலை படிப்புகளும், 10 முதுகலை படிப்புகளும், 2 பட்டய படிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளதால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும்.
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















