மேலும் அறிய

College Teacher Transfer: அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடக்கம்; ஆணைகளை வழங்கிய அமைச்சர் பொன்முடி 

4 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று (15.12.2022) தொடங்கியது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று (15.12.2022) தொடங்கியது.  10 கல்லூரி ஆசிரியர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பணியிட மாறுதலுக்கான ஆணைகளை இன்று  (15.12.2022) வழங்கினார்.

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு  இறுதியாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். 

இதனைப் பரிசீலித்த தமிழக அரசு, தமிழக  முதலமைச்சரின் அறிவுறுத்தல் மற்றும் உயர்கல்வித்  துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி இணைய வழி இடமாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறை தொடர்பான அரசாணையை 08.11.2022 அன்று வெளியிட்டது. 

இதனைத் தொடர்ந்து, http://www.tngasa.in என்ற இணைய தள முகவரி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பரிசீலிக்கப்பட்டன. 

மொத்தம் பெறப்பட்ட  569 விண்ணப்பங்களில் காலிப்பணி இடமின்மை  மற்றும் 50 சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பணிபுரியும் இடங்கள் ஆகிய காரணிகள் தவிர 192 ஆசிரியர்களுக்கு அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்த  அரசு கல்லூரிகளுக்கு வெளிப்படையான  பணியிடமாறுதல் ஆணைகள் வழங்கப்பட உள்ளன.   

அதன் அடையாளமாக 10 கல்லூரி ஆசிரியர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பணியிட மாறுதலுக்கான ஆணைகளை இன்று (15.12.2022) வழங்கினார். 

கூடுதல் விவரங்களுக்கு: http://www.tngasa.in


College Teacher Transfer: அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடக்கம்; ஆணைகளை வழங்கிய அமைச்சர் பொன்முடி 

*

உயர் கல்விக்கான உதவித் தொகை 

தமிழ்நாட்டின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கெனவே இருந்த மூவலூர்‌ ராமாமிர்தம்‌ அம்மையார்‌ திட்டமான தாலிக்குத் தங்கம் எனும் திட்டத்தினை பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றினார். இது பொது மக்களிடையே வரவேற்பு பெற்றது.

அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.  அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தொழில்நுட்பக்‌ கல்வி, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்வி இளநிலை பயிலும் மாணவிகள் இதற்கு விண்ணப்பித்து, உதவித் தொகையைப் பெற்று வருகின்றனர். 

இதையும் வாசிக்கலாம்: Guest Lecturer Post: அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்; டிச.27 கடைசி- விவரம் 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
கழிப்பறை அடைப்பு: மாணவர்களையே பள்ளம் தோண்ட வைத்த எச்.எம்.- அதிர்ச்சி வீடியோ!
கழிப்பறை அடைப்பு: மாணவர்களையே பள்ளம் தோண்ட வைத்த எச்.எம்.- அதிர்ச்சி வீடியோ!
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா செய்யணுமா? - நீட் விவகாரத்தில் காங்கிரஸ், பா.ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய நமச்சிவாயம்!
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா செய்யணுமா? - நீட் விவகாரத்தில் காங்கிரஸ், பா.ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய நமச்சிவாயம்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Jaecoo J5 Hybrid SUV: இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV
இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV
Brezza Facelift: ஃபுல் சேஃப்டி, அசத்தலான புதிய அம்சங்கள்.! அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்; முழு விவரங்கள்
ஃபுல் சேஃப்டி, அசத்தலான புதிய அம்சங்கள்.! அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்; முழு விவரங்கள்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Embed widget