TNPSC Group 2, 4 Exam Date: பிப்ரவரியில் குரூப் 2... மார்ச்சில் குரூப் 4 தேர்வு... டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு!
TNPSC Group 4, 2 Exam Notification 2022: பிப்ரவரி மாதத்தில் குரூப் 2 மற்றும் மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட உள்ளது
![TNPSC Group 2, 4 Exam Date: பிப்ரவரியில் குரூப் 2... மார்ச்சில் குரூப் 4 தேர்வு... டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு! TNPSC group exam date announced group 2 exam in february 2022, Group 4 exam March 2022- Balachandran TNPSC Group 2, 4 Exam Date: பிப்ரவரியில் குரூப் 2... மார்ச்சில் குரூப் 4 தேர்வு... டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/07/85e2c507e423e98b3346633d1656324a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக அதன் தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.
2022 ம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் குரூப் 2 மற்றும் மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் எனவும், தேர்வு அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான அறிவுப்பிற்கு முன், மாடல் வினாத்தாள் வெளியிடப்படும் எனவும், பாடத்திட்ட அமைப்பு குறித்து கடந்த 1ஆம் தேதி முதல் ஆலோசித்து ஆணையம் தயாரித்து வருகிறது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ல் 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம் - டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் https://t.co/wupaoCQKa2 | #TNPSC | #TNGovt pic.twitter.com/bKlQamVqwJ
— ABP Nadu (@abpnadu) December 7, 2021
குரூப் 2, 2 ஏ - குரூப் 4 - காலி பணியிடங்கள் எத்தனை?
குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான காலி பணியிடங்கள் - 5831
குரூப் 4 தேர்வில் பழைய காலி பணியிடம் 5255, புதிய காலி பணியிடம் 3000
காலிப் பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படவும் வாய்ப்புள்ளது என தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.
தேர்வுக்கான முழுபட்டியல் விவரம் :
2022ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு அட்டவணை - முழு விவரம்...https://t.co/wupaoCQKa2 | #TNPSC | #TNPSCExam | #Exams | #GovtExams pic.twitter.com/vRwlZ7gJPZ
— ABP Nadu (@abpnadu) December 7, 2021
தேர்வு முறைகேடுகளை தடுக்க தீவிர நடவடிக்கை :
*அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும் என்றும், விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்.
* omr விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள் தேர்வு முடிந்தபின் இனி தனியாக பிரிக்கப்படும்.
* தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
* அதிக தேர்வர்களைக் கொண்ட தேர்வுகளையும் கணினி வழித் தேர்வாக நடத்த நீண்ட காலத் திட்டம்.
#BREAKING குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு 2022 பிப்ரவரியிலும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சிலும் வெளியிடப்படும்https://t.co/wupaoCQKa2 | #TNPSC #Group2 #Group2A #Group4 #Tamilnadu pic.twitter.com/pPts909wb1
— ABP Nadu (@abpnadu) December 7, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)