மேலும் அறிய

TNPSC Group 4: 6 நிமிஷம் லேட்.. குரூப் 4 தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்ட 40 பேர்.. கதறி அழுத தேர்வர்கள்!

சீர்காழியில் 40க்கும் மேற்பட்டோருக்கு குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறியதால், சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்காழியில் 40க்கும் மேற்பட்டோருக்கு குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறியதால், சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் குரூப் 4 தேர்வுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தா மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி மற்றும் விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் குட் சமரிட்டன் பள்ளி ஆகிய இரண்டும் ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. 

இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக 40க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தாமதமாக வந்தனர். குறிப்பாக 8.59 மணிக்குள் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தேர்வர்கள் 9.05 மணிக்கு வந்தனர். தாமதமாக வந்ததால் அவர்கள் தேர்வெழுத எழுத அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வர்கள் முறையிட்டபோதும், அவர்களை அனுமதிக்க சீர்காழி வட்டாட்சியர் அனுமதி மறுத்துள்ளார். இதனால், சம்பவ இடத்திலேயே தேர்வர்கள் கண்ணீர் விட்டுக் கதறினர்.  

தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது என்னென்ன?

* தேர்வர்கள் 8.30 மணிக்கு வர வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 
* 8.59 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
* தேர்வர்கள் 12.45 மணி வரை தேர்வறைக்குள் இருக்க வேண்டும்.
* முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி அளிக்கப்படுகிறது.
* தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
* அதிகாரிகள் சரி பார்க்கும்போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி, முகத்தைக் காட்ட வேண்டும்.
* செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை.
* கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
* சமூக இடைவெளி, சுய பாதுகாப்பு, சுத்தம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
* தெளிவாகத் தெரியும் பாட்டிலில் சொந்தமாக சானிட்டைசரைத் தேர்வர்கள் எடுத்துக்கொண்டு வர வேண்டும்.
* தேர்வுக்குப் பயன்படுத்தும் சொந்த எழுது பொருட்களை, மற்ற தேர்வர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
* முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். 


TNPSC Group 4: 6 நிமிஷம் லேட்.. குரூப் 4 தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்ட 40 பேர்.. கதறி அழுத தேர்வர்கள்!

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை

* அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடத்தப்படும்.
* டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும். விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்.
* ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள், இனி தேர்வு முடிந்தபின் தனியாகப் பிரிக்கப்படும். 

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில், 6 நிமிடம் தாமதமாக வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?
வாக்குறுதி கொடுத்தாச்சு... இனி ஆக்‌ஷன்தான்! தவெக அரசை தட்டி எழுப்பும் பகுதிநேர ஆசிரியர்கள்!
வாக்குறுதி கொடுத்தாச்சு... இனி ஆக்‌ஷன்தான்! தவெக அரசை தட்டி எழுப்பும் பகுதிநேர ஆசிரியர்கள்!
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Embed widget