மேலும் அறிய

Group 4: குரூப் 4 தேர்வர்களுக்கு சூப்பர் தகவல்; கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு

குரூப் 4  அரசுப் பணிகளுக்கு 7,301 இடங்கள் மற்றும் 81 விளையாட்டு வீரர்களுக்கான பணி இடங்கள் இருந்த நிலையில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

குரூப் 4 அரசுப் பணிகளுக்கு 7,301 இடங்கள் மற்றும் 81 விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் இருந்த நிலையில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மொத்தமுள்ள 7,382 காலி இடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

இதில் 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டன.  7,301 இடங்கள் பொதுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டன. 

இந்த தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்தனர். இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21.8 லட்சத்தைக் கடந்தது. இதில், பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்தனர்.

இந்தத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7,689 மையங்களில் ஜூலை மாதம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 503 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக 534 பறக்கும் படைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டன. 4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன. 

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மீண்டும் தாமதமான நிலையில் டிசம்பர் முதல் வாரம் வெளியாகும் என்று தகவல் வெளியானது. எனினும், இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 

கூடுதல் பணியிடங்கள் சேர்ப்பு

இந்நிலையில் குரூப் 4  அரசுப் பணிகளுக்கு கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.  ஜூலையில் நடந்த தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி தாமதமான நிலையில், தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் தேர்வர்கள் கவலையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏன் தாமதம்?

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் குரூப் 4 தேர்வு முடிவுகள் சற்று தாமதமாகி வருகின்றன இன்னும் சில நாட்களுக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 தேர்வு எப்போது?

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2023 நவம்பரில் வெளியாக உள்ளது. அதற்கான தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. வீடியோவை பகிர்ந்து பகீர் கிளப்பிய அகிலேஷ் யாதவ்!
பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. வீடியோவை பகிர்ந்து பகீர் கிளப்பிய அகிலேஷ் யாதவ்!
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Breaking News LIVE: வாக்கு இயந்திரங்களை நம்பியே பாஜக தேர்தலை சந்தித்துள்ளது - செல்வப்பெருந்தகை 
Breaking News LIVE: வாக்கு இயந்திரங்களை நம்பியே பாஜக தேர்தலை சந்தித்துள்ளது - செல்வப்பெருந்தகை 
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. வீடியோவை பகிர்ந்து பகீர் கிளப்பிய அகிலேஷ் யாதவ்!
பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. வீடியோவை பகிர்ந்து பகீர் கிளப்பிய அகிலேஷ் யாதவ்!
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Breaking News LIVE: வாக்கு இயந்திரங்களை நம்பியே பாஜக தேர்தலை சந்தித்துள்ளது - செல்வப்பெருந்தகை 
Breaking News LIVE: வாக்கு இயந்திரங்களை நம்பியே பாஜக தேர்தலை சந்தித்துள்ளது - செல்வப்பெருந்தகை 
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget