மேலும் அறிய

குரூப் 2ஏ பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு தேதிகள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 2 ஏ பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதிகளை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

குரூப் 2 ஏ பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதிகளை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதன்படி, மே 15 முதல் ஜூன் 20ஆம் தேதி வரை கலந்தாய்வுப் பணிகள் நடைபெற உள்ளன.

தமிழக அரசின் பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்கள் குரூப் 1, 2, 3, 4 எனப் பல வகையான தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றது.

2023 பிப்ரவரியில் முதன்மைத் தேர்வு

அந்த வகையில் Group 2A-வுக்கான முதல்நிலைத் தேர்வும் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்வை  சுமார் 9 லட்சம் விண்ணப்பத்தாரர்கள் எழுதினர். இதில் 161 நேர்காணல் பணியிடங்களும், 5990 நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெற்றது. முதல் நிலை தேர்வில் 57 ஆயிரத்து 641 பேர் தேர்ச்சி அடைந்த நிலையில் இவர்களில் 55,071 பேர் முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது. 

இதன் தேர்வு முடிவுகள் நடப்பாண்டின் ஜனவரி மாதம் வெளியானது. இதற்கிடையில் நேர்காணல் கொண்ட 161 பணியிடங்களுக்கு 483 தேர்வர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்கள் இரண்டு கட்டங்களாக அழைக்கப்பட்டு சிறப்புத் துறை உதவியாளர் 29 பணியிடங்கள் தவிர்த்து மற்ற பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

2024 ஏப்ரல் மாதம் தரவரிசைப் பட்டியல் வெளியீடு 

அதேநேரத்தில் நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் நீண்ட மாதங்களாக வெளியிடப்படாமல் இருந்து, ஏப்ரல் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்மூலம் 5,990 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள், கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

இவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் மற்றும் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி மே 15 முதல் ஜூன் 20ஆம் தேதி வரை, இந்தப் பணிகள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளன.

இதுதொடர்பான அறிவிக்கையை https://www.tnpsc.gov.in/Document/Counselling/03_2022_GROUP_II_A_PCV_COUNS_SEL_I.pdf என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
தமிழை உலக அரங்கிற்கு கொண்டு செல்வது எப்படி? மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியின் அசத்தல் பயிலரங்கம்!
தமிழை உலக அரங்கிற்கு கொண்டு செல்வது எப்படி? மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியின் அசத்தல் பயிலரங்கம்!
MDS கனவா? புதுச்சேரி கல்லூரிகளில் சேர CENTAC விண்ணப்பங்கள் தொடக்கம்!
MDS கனவா? புதுச்சேரி கல்லூரிகளில் சேர CENTAC விண்ணப்பங்கள் தொடக்கம்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
C. Vijayabasker : ’இது ட்ரெய்லர்தான்’ இணைப்பு விழாவில் மாஸாக பேசிய சி.விஜயபாஸ்கர்..!
’இது ட்ரெய்லர்தான்’ சி.விஜயபாஸ்கர் மாஸ் பேச்சு..!
EV Two Wheeler Sales: எகிறிய இ ஸ்கூட்டர் விற்பனை! TVSதான் டாப்பு... ஜுன் மாதத்தில் மத்தவங்க எப்படி?
எகிறிய இ ஸ்கூட்டர் விற்பனை! TVSதான் டாப்பு... ஜுன் மாதத்தில் மத்தவங்க எப்படி?
JanaNayagan Censor: மீண்டும் ஜனநாயகன்..! சென்சாரில் கிடைத்த A சர்டிஃபிகேட்? ஜுலையில் CM விஜய் படம் ரிலீஸ்?
மீண்டும் ஜனநாயகன்..! சென்சாரில் கிடைத்த A சர்டிஃபிகேட்? ஜுலையில் CM விஜய் படம் ரிலீஸ்?
பொண்டாட்டியுடன் மல்லுகட்டும் புருஷன்! நாளை ரிலீசாகிறது கட்டா குஸ்தி 2 - கொடி கட்டுமா குஸ்தி?
பொண்டாட்டியுடன் மல்லுகட்டும் புருஷன்! நாளை ரிலீசாகிறது கட்டா குஸ்தி 2 - கொடி கட்டுமா குஸ்தி?
TN RAIN ALERT: இடி, மின்னலோடு மழை வெளுக்கப்போகுது.! அலர்ட் விடுத்த வானிலை மையம்- எந்த எந்த மாவட்டங்கள்.?
இடி, மின்னலோடு மழை வெளுக்கப்போகுது.! அலர்ட் விடுத்த வானிலை மையம்- எந்த எந்த மாவட்டங்கள்.?
Senthil Balaji: செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
TN Bypolls: இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
Embed widget