மேலும் அறிய

TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை 4 முதல் தொடங்க உள்ளன. தேர்விற்கான பாடத்திட்டங்களின்படி தேர்வுகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ மற்றும் குரூப் 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் சென்னையில் ஜூலை 4 முதல் தொடங்கப்பட உள்ளன. இந்த தகவலை டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

2026 ஜூன் 23 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட  அறிவிக்கையில் குரூப் 1 தேர்விற்கு 2026 ஜுன் 30 முதல் இணை யவழியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 4 முதல் பயிற்சி வகுப்புகள்

இந்த நிலையில், குரூப் 1 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை 4 முதல் தொடங்க உள்ளன. தேர்விற்கான பாடத்திட்டங்களின்படி தேர்வுகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகளை நடத்த அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சி மையம் திட்டமிட்டுள்ளது. திறமை மிக்க பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் திறம்பட நடத்தப்பட உள்ளன. மேலும் மாதிரித் தேர்வுகளுடன் கூடிய கலந்துரையாடல் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்புகளை அகில இந்திய இன்ஷியூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து கட்டணமில்லாமல் வழங்க உள்ளது.

15 ஆண்டுகளாக பயிற்சி வகுப்புகள்

மேலும் இதுபோன்ற அனைத்துவகை அரசுப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கடந்த 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு பயிற்சி பெற்ற 1300-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் மத்திய, மாநில அரசுப் பணிகளில் இணைந்துள்ளனர்.

இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் ஏனைய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

வகுப்புகள் நடைபெறும் இடம்

எண். 6/9, அக்ரஹாரம் சந்து, அரண்மனைக்காரன் தெரு (கச்சாலீஸ்வரர் ஆலயம் அருகில்) அமைந்துள்ள இக்கல்வி மையத்தில் ஜூலை 4 முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன.

வகுப்புகள் எப்போது?

வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் வகுப்புகள் நடைபெறும். ஆர்வமுள்ள தேர்வர்கள் முன்பதிவு செய்வதுடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் முகவரி‌க்கான ஆதார நகலுடன் வர வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: 97912 85693, 73387 03324,  73581 44387, 90426 92613, 63698 74318, 94446 41712 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget