TNPSC Group 1C: ரூ.2.09 லட்சம் சம்பளத்தோட அரசுப் பணி; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்- முழு விவரம்
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பணியில் மாவட்டக் கல்வி அலுவலர் (குரூப் 1 சி) பணி பதவிக்கான காலிப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி ஆகும்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பணியில் மாவட்டக் கல்வி அலுவலர் (குரூப் 1 சி) பணி பதவிக்கான காலிப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க இன்றே (ஜனவரி 13) கடைசி ஆகும். இதற்கான எழுத்துத் தேர்விற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
ஒரு முறை பதிவு / நிரந்தரப் பதிவு
விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக் கட்டணமாக ரூ.150/-ஐ செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப் பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்துகொள்ள வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
காலிப் பணியிடங்கள் பற்றிய விவரங்கள்
பதவியின் பெயர் மற்றும் பதவிக் குறியீட்டு எண் - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் 2062
பணியின் பெயர் - தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை - 11
ஊதியம்
ரூ.56900- ரூ.2,09,200 வரை
காலிப் பணியிடங்களின் பட்டியல்
மொத்தம் - 11
பொதுப் பிரிவு - 2
பொதுப் பிரிவு பெண்கள் - 1
பிற்படுத்தப்பட்ட வகுப்பு - 2
பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்கள் - 1
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ சீர் மரபினர் - 1
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ சீர் மரபினர் பெண்கள் - 1
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ சீர் மரபினர் [LD (BL)/CP/LC/DF/AC]- 1
ஆதி திராவிடர் - 2
பொதுப் பிரிவினர் 32 வயது வரையிலும் ஆசிரியராகப் பணிபுரிவோர் 42 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். ஆதி திராவிடர்களுக்கு வயது வரம்பு இல்லை.
மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஜனவரி 13 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஜனவரி 18 முதல் 20ஆம் தேதி இரவு 11.59 வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு விவரம்
முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 9ஆம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, முதன்மைத் தேர்வு விவரங்கள் வெளியாகும்.
கல்வித் தகுதி
முதுகலைப் படிப்புடன் பி.டி./ பி.எட். பட்டங்களை முடித்திருக்க வேண்டும்.
இடைநிலைக் கல்வியில் தமிழை ஒரு பாடமாக எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எச்சரிக்கை
* தேர்வாணையத்தின் தெரிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரரின் தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.
* பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.
* இது போன்ற தவறான மற்றும் நேர்மையற்றவர்களால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் எவ்வித இழப்புக்கும் தேர்வாணையம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது.
* இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் அனைத்துத் தகவல்களுக்கும் விண்ணப்பதாரரே முழுப் பொறுப்பாவார். விண்ணப்பதாரர், தேர்விற்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்பொழுது, ஏதேனும் தவறு ஏற்படின், தாங்கள் விண்ணப்பித்த இணையச்சேவை மையங்களையோ, பொதுச்
சேவை மையங்களையோ குற்றம் சாட்டக் கூடாது. விண்ணப்பதாரர் பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தினை இறுதியாக சமர்ப்பிக்கும் முன்னர், நன்கு சரிபார்த்த பின்னரே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.
தேர்வு குறித்த முழுமையான விவரங்களை அறிய: https://tnpsc.gov.in/Document/tamil/37_2022_DEO_TAM.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.