மேலும் அறிய

Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!

Tamil Nadu Engineering Admission 2026: மே 3ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், ஜூன் 5ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நடந்து முடிந்தது.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த முறை கணிசமான அளவு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 2026- 27ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு மொத்தம் 3,02,373 மாணவ - மாணவியர் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதில் பதிவு செய்து பதிவுக் கட்டணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,45,220 ஆகும். இதில் பொதுப் பிரிவினர் - 2,42,909 ஆவர். அதேபோல தொழிற்கல்விக்கு 2,311 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

50 ஆயிரத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர்கள்

அதேபோல அரசு பள்ளியில் பயின்ற மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் 7.5% இடஒதுக்கீட்டு பதிவு செய்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை - 50,373.

இதில் பொதுப் பிரிவினர் - 49,774

தொழிற்கல்வி - 599

இதில் பாலின வாரியாக ஆண்களின் எண்ணிக்கை - 24,742

பெண்களின் எண்ணிக்கை - 25,628

மூன்றாம் பாலினத்தவர்- 3

ஆக மொத்தம் 50,373 அரசுப் பள்ளி மாணவ மாணவியர் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்து உள்ளனர். முன்னதாக மே 3ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், ஜூன் 5ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நடந்து முடிந்தது.

இன்று வெளியாகும் ரேண்டம் எண்; தரவரிசைப் பட்டியல் எப்போது?

ரேண்டம் எண் இன்று (ஜூன் 10) வெளியாக உள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் ஜூன் 29ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கலை, அறிவியல் படிப்புகளில் சேர 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில், ஜூன் 18ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளில் அரசு இட ஒதுக்கீட்டில் சேர இந்த கலந்தாய்வில் பங்குபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

110 இடங்களில் பொறியியல் சேர்க்கை சேவை மையம்

இணையதள வசதி இல்லாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 110 இடங்களில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதன் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு

மாணவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டி பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்பக் இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

1800-425-0110 என்ற எண்ணிலும், tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
Embed widget