மேலும் அறிய

SMC: பள்ளி மேலாண்மைக்‌ குழு கூட்டத்தில் பின்பற்ற வேண்டிய 8 அம்சங்கள்; கல்வித்துறை உத்தரவு

அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்டம் மாதந்தோறும்‌ இறுதி வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப்‌ பின்பற்றி நடைபெற்று வருகிறது. 

அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்டம் மாதந்தோறும்‌ இறுதி வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப்‌ பின்பற்றி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் பள்ளி மேலாண்மைக் குழுவில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. 

இம்மாதம்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்டம்‌ 25.11.2022 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல்‌ 3:00 மணி முதல்‌ 4.30 மணி வரை நடத்த அறிவுறுத்தப்படுகிறது. இந்திய அரசமைப்பு தினம்‌ நவம்பர்‌ 26 ஆம்‌ நாள்‌ கொண்டாட இருப்பதால்‌ நவம்பர்‌ 25 ஆம்‌ நாள்‌ நடக்க இருக்கும்‌ பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில்‌ இந்திய அரசமைப்பு நாள்‌ உறுதி மொழியை அனைத்து உறுப்பினர்களும்‌ எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்களின்‌ வருகைப்பதிவு

பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்களின்‌ வருகைப்பதிவினை தலைவர்‌ மட்டுமே பெற்றோர்‌ செயலியில் கூட்டம்‌ நடைபெறும்போது பதிவு செய்தல்‌ வேண்டும்‌. தலைவர்‌ தங்களது கைபேசி அல்லது பிற உறுப்பினர்களின்‌ கைபேசி மூலமாக வருகைப் பதிவினை பதிவு செய்வதை தலைமையாசிரியர்‌ உறுதி செய்தல்‌ வேண்டும்‌.

பள்ளி மேம்பாட்டுத்‌ திட்டம்‌

பள்ளி மேம்பாட்டுத்‌ திட்டம்‌ தயாரிக்கவும்‌ அதை முழுமையாகச்‌ செயல்பாட்டுக்குக்‌ கொண்டுவரவும்‌ இதற்கெனப்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழு தொகுதியைப்‌ பெற்றோர் செயலியில்‌ பகுதியாகப்‌ பள்ளிக்‌ கல்வித்‌துறை பயிற்சியின்‌ வாயிலாக அறிமுகப்படுத்தியுள்ளது.

திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்‌

1. இடைநிற்றலுக்கு அதிக வாய்ப்புள்ள குழந்தைகள்‌

இடைநிற்றலுக்கு அதிக வாய்ப்புள்ள குழந்தைகள்‌ தொடர்பாக எமிஸ் தரவினை குடியிருப்பு வாரியாகத்‌ தொகுத்து அவர்களைப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்‌ சார்ந்து கலந்தாலோசனை செய்யப்படுதல்‌ வேண்டும்‌. தொடர்புகொள்ள இயலாத நிலையில்‌ உள்ள குழந்தைகளின்‌ தகவல்களை இல்லம்‌ தேடிக் கல்வி தன்னார்வலர்களிடம்‌ வழங்கி, அவர்கள்‌ மூலம்‌ அக்குழந்தைகள்‌ பள்ளிக்கு மீண்டும்‌ வருவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

2. இல்லம்‌ தேடிக்‌ கல்வி- ஆசிரியர்‌ மற்றும்‌ தன்னார்வலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்‌

தொடக்கநிலை தன்னார்வலராக இருப்பின்‌: குறைதீர்‌ கற்பித்தல்‌ குறித்தும் மாணவர்களின்‌ கற்றல்நிலை குறித்தும்‌ தன்னார்வலரும் ஆசிரியரும்‌ கலந்துரையாட வேண்டும்‌.

உயர்‌ தொடக்கநிலை தன்னார்வலராக இருப்பின்‌: மையங்களில்‌ அதிக கவனம்‌ தேவைப்படும்‌ குழந்தைகளின்‌ விவரங்களை தன்னார்வலர்‌ ஆசிரியரிடம்‌ கேட்டறிந்து அவர்களை குறித்துக்கொள்ள வேண்டும்‌.

தன்னார்வலர்கள்‌ இல்லம்‌ தேடிக்‌ கல்வி மையத்திற்கு தொடர்ச்சியாக வருகை தராத குழந்தைகளின்‌ பெயர்களை, ஆசிரியரிடம்‌ பகிர்ந்து கொண்டு. அக்குழந்தைகளை தொடர்ச்சியாக மையத்திற்கு வர ஆசிரியர்‌ வழியே ஊக்கப்படுத்த வேண்டும்‌.

3.மேல்நிலைப்‌ பள்ளி- மாணவர்களின்‌ உயர்கல்வி ஆலோசனை

28.10.2022 அன்று நடைபெற்ற மாணவர்களின்‌ கூட்டதிற்கு பிறகு பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்‌ அடிப்படையில்‌ 8457 மாணவர்கள்‌ உயர் கல்விக்கு சென்றுள்ளார்கள். மீதமுள்ள மாணவர்களில்‌ உயர்கல்வி தொடராத மாணவர்களின்‌ காரணங்கள்‌ கண்டறியப்பட்டு 1957 மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவிகளை மாவட்ட ஆட்சியர்களின்‌ வழிகாட்டுதலில்‌ வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயர் கல்வித் துறையின்‌ ஒத்துழைப்புடன்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ காலி இடங்கள்‌ கண்டறியப்பட்டு, வருகிற 18.11.2022 வரை நீடிக்கப்பட்டுள்ள சேர்க்கையில்‌ மாணவர்கள்‌ சேர்ந்து பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்‌. தொலைபேசியில்‌ தொடர்புகொள்ள முடியாத 4007 மாணவர்களை பள்ளி மேலாண்மைக்குழு மாவட்ட கருத்தாளர்கள்‌ மூலம்‌ கண்டறிந்து ஒரு வார காலத்தில்‌ அவர்களின்‌ தரவுகள்‌ சேகரிக்கப்படும்‌. அவ்வாறு கண்டறியப்பட்ட மாணவர்களுக்கான தொடர்‌ வழிகாட்டுதல்கள்‌ வழங்கப்படவுள்ளது.

4.மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி

மாற்றுத்‌ திறன்‌ மாணவர்களின்‌ திறமைகளைக்‌ கண்டறிய வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழு கூட்டதில்‌ தலைமை ஆசிரியர்‌ இச்செயல்பாடுகள்‌ மற்றும்‌ உறுதிமொழியை அனைத்து உறுப்பினர்கள்‌ எடுத்துக்கொள்வதையும்‌ இதற்கான தீர்மானங்களை வழிமொழிந்து பதிவேட்டில்‌ பதிவு செய்யவும்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌

5. கலை மற்றும்‌ கலாச்சாரம்‌ -கலை அரங்கம்‌ மற்றும்‌ கலை திருவிழா

பள்ளியில்‌ கலை அரங்க செயல்பாடுகள்‌ பண்பாட்டு செயல்பாடுகள்‌ தொடங்குவது சார்பு தீர்மானம்‌ நிறையேற்றப்படுவதை பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுதி செய்ய வேண்டும்‌.
தேவைப்படும்‌ போது , முடிந்தவரை காட்சிக்‌ கலை, நாட்டுப்‌புறக்கலை, நாடகம்‌ மற்றும்‌ நடனம்‌ ஆகிய அமர்வுகளுக்கான பொருட்களை வழங்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள அறிவுறுதப்படுகிறார்கள்‌.

இம்மாதம்‌ 23 ஆம்‌ தேதி முதல்‌ பள்ளிகளில்‌ கலைத்‌ திருவிழா நடைபெற ஒருக்கிறது. இந்த நிகழ்விற்கு தேவைக்கேற்ப ஒத்துழைப்பை வழங்குவதற்கு பள்ளி மேலாண்மைக்‌ குழுவினர்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

SMC: பள்ளி மேலாண்மைக்‌ குழு கூட்டத்தில் பின்பற்ற வேண்டிய 8 அம்சங்கள்; கல்வித்துறை உத்தரவு

6. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்‌ தடுப்பு குறித்து விழிப்புணர்வு வாரம்‌ கடைப்பிடித்தல்‌:

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்‌ தடுப்பு குறித்து விழிப்புணர்வு வாரம்‌ (நவம்பர்‌ 18 முதல்‌ 24 வரை) கடைப்பிடித்தல்‌ தொடர்பாக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்‌படி பள்ளி குழந்தைகள்‌ பாதுகாப்பு மற்றும்‌ ஆலோசனை வழங்குதல்‌ குழுவில்‌ உள்ள ஆசிரியர்கள்‌. தலைமையாசிரியர்‌ மற்றும்‌ உறுப்பினர்களுடன்‌ கொடுக்கப்பட்ட சுயமதிப்பீட்டுப்‌ படிவத்தின்‌ மூலம்‌ பெறப்பட்ட தரவுகளை நவம்பர்‌ 25 அன்று
நடைபெறும்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுக்கூட்டத்தில்‌ பகிர்ந்து கலந்துரையாடவும்‌ மேலும்‌ பள்ளிகளில்‌ குழந்தைகள்‌ பாதுகாப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்து ஆலோசிக்கவும்‌ அறிவுறுத்தப்‌படுகிறார்கள்‌. குழந்தைகள்‌ பாதுகாப்பு என்பது சமூகக்கடமை என்ற
உணர்வை ஒவ்வொருவரும்‌ பெறவேண்டியதன்‌ அவசியத்தை SMC கூட்டத்தில்‌ வலியுறுத்தலாம்‌.

7.பழுதடைந்த மற்றும்‌ பராமரிப்பற்ற நிலையிலுள்ள பள்ளி கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை மறுசீரமைப்பு செய்வதற்கான கலந்தாலோசனை செய்து தீர்மானங்கள்‌ நிறைவேற்ற அறிவுறுத்தப்படுகிறது. -

8.போக்குவரத்து , பாதுகாவலர்‌ வசதி - போக்குவரத்து, பாதுகாவலர்‌ வசதியுள்ள பள்ளிகளுக்கான செயல்பாடுகள்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுவின்‌ ஒத்துழைப்புடன்‌ நன்முறையில்‌ செயல்படுத்த வேண்டும்‌.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Embed widget