மேலும் அறிய

Art Music Competition: பள்ளி மாணவர்களுக்கு கலை, இசைப் போட்டிகள்: கலந்துகொள்வது எப்படி?- விவரம்

பள்ளி மாணவ, மாணவியருக்கு சென்னை மாவட்ட அளவிலான கலை, இசைப்போட்டிகள்‌ அரசின்‌ சார்பில்‌ நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவ, மாணவியருக்கு சென்னை மாவட்ட அளவிலான கலை, இசைப்போட்டிகள்‌ அரசின்‌ சார்பில்‌ நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பரதநாட்டியம்‌, கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

கலை பண்பாட்டுத் துறையின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ செயல்படும்‌, தமிழ்நாடு ஜவஹர்‌ சிறுவர்‌ மன்றத்தின்‌ வாயிலாக 5 முதல்‌ 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு, கலைப்‌ பயிற்சிகள்‌ அளிக்கப்பட்டு வருகின்றன. சிறார்களிடையே மறைந்து கிடக்கும்‌ கலைத்திறன்களை வெளிக்கொணரும்‌ வகையில்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ பரதநாட்டியம்‌, கிராமியம், குரலிசை மற்றும்‌ ஓவியம்‌ ஆகிய நான்கு கலைப்‌ பிரிவுகளிலும்‌, 5-8, 9- 12, 13 -16 வயதுப்‌ பிரிவுகளிலும்‌ போட்‌ டிகள்‌ நடத்தப்படுகின்றன. 

அவற்றில்‌ முதல் பரிசு பெற்றவர்களிடையே 9-12, 13- 16க்கு மாநில அளவில்‌ போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்‌, சான்றிதழ்களும்‌ வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது. 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில்‌ மாவட்ட அளவில்‌ முதல்‌ பரிசு பெற்ற சிறார்களுக்கு மாநில அளவிலான கலைப்‌ போட்டிகள்‌ நடத்தி, பரிசுத்‌ தொகையும்‌, பாராட்டுச் சான்றிதழ்களும்‌ வழங்கப்பட உள்ளன.

அவ்வகையில்‌, முதற்கட்டமாக 5-5, 9-12, 13-16 என்ற 3 வயது வகைப்‌ பிரிவில்‌ சென்னை மாவட்ட அளவிலான கலைப்‌ போட்டிகள்‌ 12.08.2023 அன்று பரதநாட்டியம்‌, கிராமிய நடனம்‌ மற்றும்‌ குரலிசை ஆகிய கலைப்‌ போட்டிகளும்‌ மற்றும்‌ 13.08.2023 அன்று ஓவிய கலைப்‌ போட்டியும்‌ நடைபெறவுள்ளன. கலைப்‌ போட்டிகள்‌ அனைத்தும்‌ சென்னை- 28, இராஜா அண்ணாமலைபுரம்‌ டாக்டர்‌ டி.ஜி.எஸ்‌.தினகரன்‌ சாலையிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில்‌ நடைபெற உள்ளன.

போட்டிகளில்‌ கலந்து கொள்ளும்‌, மாணவ, மாணவிகளின்‌ பெயர்‌, வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின்‌ பெயர்‌ ஆகிய விவரங்களுடன் பிறப்புச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். பரத நாட்டியம், கிராமிய நடனம், குரலிசை ஆகிய கலை போட்டிகளின்‌ 5-8, 9-12 வயது பிரிவு மாணவ, மாணவியருக்கு காலை 9.30 மணி முதல்‌ பிற்பகல்‌ 1.00 மணி வரையிலும்‌, 13- 16 வயது வகை மாணவ, மாணவியருக்கு பிற்பகல்‌ 2 மணி முதல்‌ மாலை 4.30 மணி வரையிலும்‌, ஓவியப்‌ போட்டிகள்‌ காலை 10.00 மணி முதல்‌ பிற்பகல்‌ 1.00 மணி வரையிலும்‌ நடைபெறும்‌.

போட்டிகளில்‌ கலந்துகொள்ளும்‌ மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும்‌, மாவட்ட போட்டியில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்‌ வழங்கப்படும்‌.

போட்டிகளுக்கான விதிமுறைகள்‌

1. பரதநாட்டியம்‌ (செவ்வியல்)

பரத நாட்டியம்‌, குச்சிப்புடி, மோகினி ஆட்டம்‌ போன்ற நடனங்கள்‌ ஆடலாம்‌. முழு ஒப்பனை மற்றும்‌ உரிய உடைகளுடன்‌ நடனம்‌ இருத்தல்‌ வேண்டும்‌. திரைப்படப்‌ பாடல்களுக்கான நடனங்கள்‌ (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள்‌ தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள், மற்றும்‌ சூழு நடனங்களுக்கு அனுமதியில்லை. குறுந்தகடுகள்‌ / பென்‌ டிரைவ்‌ ஆகியவற்றினை பயன்படுத்திக்‌கொள்ளலாம்‌. இவற்றை போட்டியில்‌ பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்‌. குறைந்த பட்சம்‌ 3 நிமிடங்கள்‌, அதிக பட்சம்‌  5 நிமிடங்கள்‌ வரை நடனமாட அனுமதிக்கப்படும்‌.

2. கிராமிய நடனம்‌ (நாட்டுப்புறக்‌ கலை)

தமிழகத்தின்‌ மாண்பினை வெளிப்படுத்தும்‌ கிராமிய நடனங்கள்‌ ஆடலாம்‌. முழு ஒப்பனை மற்றும்‌ உரிய உடைகளுடன்‌ நடனம்‌ இருத்தல்‌ வேண்டும்‌ திரைப்படப்‌ பாடல்களுக்கான நடனங்கள்‌ (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள்‌ தவிர்த்து) மற்றும்‌ குழு நடனங்கள்‌ அனுமதியில்லை. குறுந்தகடுகள்‌ / பென்‌ டிரைவ்‌ பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌. இவற்றை போட்டியில்‌ பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்‌. குறைந்த பட்சம்‌ 3 நிமிடங்கள்‌, அதிக பட்சம்‌ 5 நிமிடங்கள்‌ வரை நடனமாட அனுமதிக்கப்படும்‌.

3. குரலிசை

கர்நாடக இசை பாடல்கள்‌, தேசியப்‌ பாடல்கள்‌, சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள்‌, நாட்டுப்புறப்‌ பாடல்கள்‌ மட்டுமே பாட வேண்டும்‌. மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள்‌, பிற மொழி பாடல்கள்‌, குழுப்பாடல்களுக்கு அனுமதியில்லை. குறைந்த பட்சம்‌ 3 நிமிடங்கள்‌, அதிக பட்சம்‌ 5 நிமிடங்கள்‌ வரை பாட
அனுமதிக்கப்படும்‌.

4. ஓவியம்‌ 

40x 30 செ.மீ. அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும்‌. பென்சில்‌, கிரையான்‌, வண்ணங்கள்‌, போஸ்டர் கலர்‌, வாட்டர்‌ கலர்‌ , ஆயில்‌ கலர்‌ பெயிண்டிங்‌ என எவ்வகையிலும்‌ ஓவியரின்‌ அமையலாம்‌. ஓவியத்தாள்‌, வண்ணங்கள்‌ தூரிகைகள்‌ உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப்‌ போட்‌டியாளர்களே கொண்டு வருதல்‌ வேண்டும்‌. குழுவாக ஓவியங்கள்‌ வரைய அனுமதியில்லை. ஒவ்வாரு வயது வகைக்கும்‌ தனித்தனி தலைப்புகள்‌ போட்‌டி தொடங்கும்‌ போது அறிவிக்கப்படும்‌.

5. வயது விவரம்‌ (1.6.2023 அன்று உள்ளபடி 16 வயது) 

அ. 5 முதல்‌ 8 வயது பிரிவு - 01.06.2015 முதல்‌ 31.05.2018 வரை
ஆ. 9 முதல்‌ 12 வயது பிரிவு - 01.06.2011 முதல்‌ 31.05.2015 வரை
இ. 13 முதல்‌ 16 வயது பிரிவு - 01.06.2007 முதல்‌ 31.05.2011 வரை

கலந்துகொள்வது எப்படி?

மேலும்‌ விவரங்களுக்கு 044-28192152 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Embed widget