மேலும் அறிய

12th Result 2024: பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடம்; எத்தனை பேர் தேர்ச்சி - முழு விவரம் இதோ

Tiruvannamalai 12th Result 2024: திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரத்தை கீழே அறியலாம்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், தற்போது அதாவது மே 6ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியிடப்பட்டது. மாணவர்கள் www.tnresults.nic.in மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். தொடர்ந்து மார்ச் 23-ம் தேதி முதல் மாணவர்களின் விடைத் தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத் தாள்கள் மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் பணி ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 13ஆம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற்றது.  

12th Result 2024: பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடம்; எத்தனை பேர் தேர்ச்சி - முழு விவரம் இதோ

இந்நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு காண முடிவு வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கீழ்க்கண்ட இணைய வழி மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

www.dge1.tn.nic.in , 
www.dge2.tn.nic.in , 
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in

ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12th Result 2024: பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடம்; எத்தனை பேர் தேர்ச்சி - முழு விவரம் இதோ

திருவண்ணாமலை மாவட்டம் தேர்ச்சி சதவீதவிதத்தில் கடைசி  

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 24,021 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 90.47 சதவீதம் ஆகும். 

திருவண்ணாமலை  மாவட்டத்தில் மாணவர்கள் 12724, மாணவிகள் 13827 மொத்தமாக 26551 பேர் தேர்வு எழுதினர். இதில் 12724 மாணவர்களில் 11,037 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 1687 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். 13827 மாணவிகளில் 12,984 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 843 மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் 86.74 சதவீதம், மாணவிகள் 93.90 சதவீத மட்டுமே பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொத்தம் மாணவ, மாணவிகள் என 2530 பேர் தோல்வி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
Embed widget