TN 10th Result 2023: ரிசல்ட்க்கு பின் என்ன படிக்கலாம் என்பதில் குழப்பமா? இந்த நம்பருக்கு ஒரே கால்! பள்ளிக்கல்வித்துறை அசத்தல்!
பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என்று அவரவர் இதை படி, இப்படி படிச்சுட்டு போனா உன் வாழ்க்கை எதிர்காலத்தில் இப்படி இருக்கும் என்று எதையாவது கூறி உங்களை குழப்ப நேரிடலாம்.
தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதற்காக தேர்வு எழுதிய மாணவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காத்திருக்கின்றன.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வானது கடந்த ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தொடர்ந்து அடுத்த 5வது நாள், அதாவது ஏப்ரல் 25ம் தேதி முதலே விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி விறுவிறுப்பாக மே 3ம் தேதி நடைபெற்றது.
வெளியாகிறது தேர்வு முடிவுகள்:
சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் பொதுத் தேர்வு முடிவுகளை இன்று காலை 10 மணிக்கு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட இருக்கிறார்.
என்ன படிக்கலாம்..?
தேர்வு முடிவு வருவதற்கு முன்பு ஒவ்வொரு மாணவ- மாணவிகளுக்கு மதிப்பெண்கள் பற்றிய பயம் வரும். இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு என்ன படிக்கலாம்? நாம் எடுத்த மதிப்பெண்ணுக்கு எந்த பள்ளியில் என்ன பாடப்பிரிவு எடுக்கலாம் என்ற குழப்பம் ஆட்கொள்ளும்.
பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என்று அவரவர் இதை படி, இப்படி படிச்சுட்டு போனா உன் வாழ்க்கை எதிர்காலத்தில் இப்படி இருக்கும் என்று எதையாவது கூறி உங்களை குழப்ப நேரிடலாம்.
இதற்கெல்லாம் தீர்வு அளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு புதிய வழிகாட்டியாக முன்நின்றுள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட குறிப்பில், “ 10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பிறகு, என்ன பாடம் தேர்ந்தெடுக்கலாம்? உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் 14417 உதவி மையம் பதிலளிக்கிறது” என தெரிவித்துள்ளது.