மேலும் அறிய

அரசுப்பள்ளியில் ஆர்வத்துடன் தமிழ் மொழி கற்கும் வடமாநில குழந்தைகள் - எங்கு தெரியுமா?

ஆரம்ப காலங்களில் தமிழ் கற்பது சிரமமாக இருந்தாலும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களுடன் பயிலும் போது மிக எளிதாக மொழிப்பாடங்களை கற்க முடிகிறது என நெகிழ்ச்சி.

திருப்பூர் மாவட்டத்தில் பீகார், ஒரிசா, ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் மாவட்டம் முழுவதும் தங்களது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். கடந்த காலங்களில் இவர்களின் குறிக்கோள் வேலை செய்வது பணம் சம்பாதிப்பது அதை ஊருக்கு கொண்டு செல்வது என்பது மட்டுமே இருந்து வந்தது. தற்பொழுது அந்த நிலை மாறி தாங்கள் வேலை செய்தாலும் பரவாயில்லை தங்களது குழந்தைகள் நல்ல கல்வியை பெற வேண்டும் என்ற மனப்பக்குவம் அவர்களுக்கு வந்துள்ளது. 

இதன் காரணமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 15,000 மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் வழியில் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் சேர்ப்பவர்களின் எண்ணிக்கையானது கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 10 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இங்கேயே தங்கி இருந்து பணிபுரிந்து வருவதால் அவர்களின் குழந்தைகள் தமிழை நன்றாக கற்று தமிழ் பேச வேண்டும் என்று அரசு பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். அரசுப் பள்ளிகளை பொருத்தவரை வட மாநிலத்தவர்களின் குழந்தைகளின் கல்விக்காக சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வடமாநில குழந்தைகளுக்கு என தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் இந்தி மொழியில் குழந்தைகளிடம் பேசி அவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியும் ஹிந்தி மூலமாக தமிழ் வழிக் கல்வியும் கற்பித்து வருகின்றனர். 

அரசுப்பள்ளியில் ஆர்வத்துடன் தமிழ் மொழி கற்கும் வடமாநில குழந்தைகள் - எங்கு தெரியுமா?

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், முதலில் எழுத்து வடிவம் பின்னர் கதை வடிவிலான பாடங்கள் என சிறுக சிறுக அவர்களுக்கு தமிழை புரிய வைத்து அதன் பிறகு தமிழ் வழிக் கல்வியை பயில வைப்பதாகவும், ஆரம்ப காலங்களில் தமிழ் மொழி கற்க சிரமப்பட்டாலும் போகப்போக மிக எளிதாக தமிழ் வழிக் கல்வியை வட மாநில குழந்தைகள் சிறப்பாக கற்று தேர்ந்து வருவதாகவும் தமிழில் எழுதவும் படிக்கவும் நன்கு பழகி விட்டதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பணி சவாலாக இருந்தாலும் மற்ற மாநில குழந்தைகள் தமிழ் கல்வியை விரும்பி படிப்பதை காணும் போது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கின்றனர். 

இது மட்டுமின்றி தற்பொழுது தமிழக அரசு சார்பில் பள்ளி கல்வி இயக்குனர் ஒரு உத்தரவு பிறப்புத்துள்ளார். அதன்படி வட மாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு சேர்ந்து அதிக மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தரவு திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் வட மாநில மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவிலான வட மாநில மாணவர்கள் இந்த ஊக்கத் தொகையை பெறுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என ஆசிரியர்கள் கூறினார். 

அரசுப்பள்ளியில் ஆர்வத்துடன் தமிழ் மொழி கற்கும் வடமாநில குழந்தைகள் - எங்கு தெரியுமா?

தமிழ் கற்பது தொடர்பாக வடமாநில குழந்தைகள் கூறுகையில், "ஆரம்ப காலங்களில் தமிழ் கற்பது சிரமமாக இருந்தாலும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களுடன் பயிலும் போது மிக எளிதாக மொழிப்பாடங்களை கற்க முடிகிறது. உடன் படிக்கும் சக மாணவ மாணவிகளும் தமிழிலேயே உரையாடுவதால் எங்களுக்கு அதனை கற்றுக்கொள்ள இன்னும் எளிதாக இருந்தது. அது மட்டும் இன்றி வீடுகளிலும் நாங்கள் தமிழ் மொழியிலேயே பேசிக் கொள்வதால் வெகு விரைவிலேயே சரளமாக பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டோம். வருகின்ற பொதுத் தேர்வுகளிலும் மற்ற பாடங்களைப் போலவே தமிழ் மொழி பாடங்களிலும் அதிக அளவில் மதிப்பெண்கள் பெறுவதோடு அரசு போட்டித் தேர்வுகளுக்கும் எங்களை தயார் படுத்திக் கொள்வோம்" என்றனர்.

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Embed widget