மேலும் அறிய

தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.87 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கல்

தஞ்சை மாதாக்கோட்டை சாலையில் இயங்கி வரும் மதர் தெரசா பவுண்டேசன் சார்பில் உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு கைம்பெண்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மதர் தெரசா அன்பு இல்லத்தில் நடைபெற்றது.

தஞ்சாவூர்: தஞ்சை மாதாக்கோட்டை சாலையில் இயங்கி வரும் மதர் தெரசா பவுண்டேசன் சார்பில் உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு கைம்பெண்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மதர் தெரசா அன்பு இல்லத்தில் நடைபெற்றது. இதில் 47 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.87 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

கைம்பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும்

நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் சம்பத் ராகவன், டாக்டர் ராதாபாய், முரளிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பாரத் கல்லூரி குழும செயலாளர் புனிதா கணேசன்  சிறப்பு விருந்தினராக பங்கேற்று கைம்பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழவும், தங்களாலும் சமூகத்தில் சாதிக்க முடியும் என்பதை பல்வேறு சாதனை படைத்த கைம்பெண்கள் பற்றிய உதாரணங்களோடு விளக்கி கூறினார்.

கைம்பெண்களுக்கான வேலைவாய்ப்புகள், மானியங்கள்

தமிழ்நாடு மாநில கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரிய உறுப்பினரும், மனநல மருத்துவருமான ரேணுகா ஆலிவர், மகளிர் நல வாரியத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள், அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து விளக்கிக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். காணிக்கை அன்னை சபை ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரோசி கைம்பெண்களுக்கான வேலைவாய்ப்பு பற்றியும் தனியாகவோ, குழுவாகவோ செய்யக்கூடிய பல்வேறு தொழில்கள் குறித்தும்,  படிப்பு மற்றும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு அல்லது தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டிய வழிமுறைகள், அதற்கு வங்கிகள் அளிக்கும் கடன்கள், அரசு மானியங்கள் பற்றி விளக்கிக் கூறினார்.

மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கைம்பெண்களின் குடும்பத்தில் நன்கு படிக்கக்கூடிய 47 மாணவ, மாணவிகளுக்கு மதர் தெரசா பவுண்டேசன் சார்பில் ரூ. 4,87,400/-க்கான கல்வி உதவித் தொகையை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்கள் ஷார்ஜாவின் அரசு சிறப்பு திட்டங்களின் இயக்குநரான எட்வின் மரிய அரசு, வீரகுறிச்சி அருள் மேக்ஸ் பவுண்டேசன் இயக்குநர் அருள் சூசை ஆகியோர் மதர் தெரசா பவுண்டேசன் செய்துவரும் பணிகளை பாராட்டி பேசினர்.

பரிசுப்பொருட்கள் வழங்கல்

மேலும் அருள் மேக்ஸ் பவுண்டேசன் சார்பாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 400க்கும் மேற்பட்ட கைம்பெணகளுக்கு தலா ரூ. 1,000/- மதிப்பிலான பரிசுப்பொருட்கள்  வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மதர் தெரசா பவுண்டேசன் சேர்மன் சவரிமுத்து வரவேற்று பேசுகையில், கைம்பெண்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகைகளைப் பெற பவுண்டேசன் உதவும். பவுண்டேசன் விதிமுறைகளுக்கு உட்பட்டு வரும் கைம்பெண்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேவைப்படுபவர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கமுடியும். அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வேண்டிய உதவிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார். அறங்காவலர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை மதர் தெரசா பவுண்டேசன் நிர்வாக மேலாளர் மெர்சி. திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார், தளவாட மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் ராணி, ரேணுகா, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிறிஸ்டியா, வர்ஷினி, தன்னார்வ தொண்டர்கள் குருமூர்த்தி, ஹர்ஷன், வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget