மேலும் அறிய

TANCET Final Answer Key: டான்செட் தேர்வுக்கான இறுதி விடைக் குறிப்பு வெளியீடு: பார்ப்பது எப்படி?

TANCET 2023 Final Answer Key:  2023ஆம் ஆண்டு டான்செட் தேர்வுக்கான இறுதி விடைக் குறிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதைப் பார்ப்பது எப்படி என்று காணலாம்.

 2023ஆம் ஆண்டு டான்செட் தேர்வுக்கான இறுதி விடைக் குறிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதைப் பார்ப்பது எப்படி என்று காணலாம்.

தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுகலைப் படிப்புகளில் சேர, மாணவர்கள் டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை எழுதி வருகின்றனர்.இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத மாணவர்கள் பிப்ரவரி 22ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. அவர்களுக்கான தேர்வு மார்ச் 25 அன்று நடைபெற்றது.

சிஇஇடிஏ தேர்வு

கடந்த ஆண்டு வரை எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். எனப்படும்  முறையே முதுகலை பொறியியல், முதுகலை தொழில்நுட்பம், முதுகலை கட்டிடவியல் மற்றும் முதுகலை திட்டமிடல் (M.E. M.TECH., M.ARCH., M.PLAN) படிப்புகளுக்கு டான்செட் தேர்வு மூலமே மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்த ஆண்டு சிஇஇடிஏ எனப்படும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை (CEETA- COMMON ENGINEERING ENTRANCE TEST AND ADMISSIONS) அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் B.E, B.Tech., Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது. சிஇஇடிஏ தேர்வு மார்ச் 26ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. 

எம்சிஏ தேர்வுக்கு 9,820 தேர்வர்களும் எம்பிஏ தேர்வுக்கு 24,468 தேர்வர்களும் விண்ணப்பித்து இருந்தனர். சிஇஇடிஏ தேர்வுக்கு 4,961 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

2022 டான்செட் தேர்வு

கடந்த ஆண்டு டான்செட் தேர்வு மே 14ஆம் தேதி நடைபெற்றது. குறிப்பாக எம்சிஏ படிப்பிற்கு மே 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெற்றது. எம்பிஏ படிப்பிற்கு மே 14-ஆம் தேதி மதியம் 2:30 முதல் மாலை 4:30  மணி வரை தேர்வுகள் நடைபெற்றன. முதுகலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே 15 அன்று நடைபெற்றது.

விடைக் குறிப்பு வெளியானது

இந்த டான்செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அதில் வரும் மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு ஒன்று நடைபெறும். அந்த கலந்தாய்வு மூலமாக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம். மார்ச் மாதத்தில் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. 

இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 11) இறுதி விடைக் குறிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் இ-மெயில் முகவரி, பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு, விடைக் குறிப்பைக் காணலாம். 

விரைவில் தேர்வு முடிவுகள் 

இதற்கிடையே ஏப்.15-ம் தேதிக்குள் டான்செட், சீட்டா தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழக டான்செட் செயலாளர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். தேர்வு முடிவுகள் வந்த பின்னர் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு: தொலைபேசி எண்கள்: 044 – 22358314 / 22358289 

இ- மெயில் முகவரி: tanceeta@gmail.com

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
Student admissions in colleges : மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
ITI படிக்க ஆசையா? ரூ.20,000 சம்பளத்தில் வேலை உறுதி! – விழுப்புரம் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு!
ITI படிக்க ஆசையா? ரூ.20,000 சம்பளத்தில் வேலை உறுதி! – விழுப்புரம் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
நியாயமா சிஎம் சார்? ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி!
நியாயமா சிஎம் சார்? ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி!
Strait of Hormuz: “எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
“எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
Annamalai: சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் தரும் BGauss இ ஸ்கூட்டர்கள்! விலை, சிறப்புகள் என்னென்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் தரும் BGauss இ ஸ்கூட்டர்கள்! விலை, சிறப்புகள் என்னென்ன?
Kim Jong Un: தென் கொரியாவை பீதியிலேயே வைத்திருக்கும் வட கொரியா; அதிநவீன ஆயுத சோதனை; பார்வையிட்ட கிம் ஜாங் உன்
தென் கொரியாவை பீதியிலேயே வைத்திருக்கும் வட கொரியா; அதிநவீன ஆயுத சோதனை; பார்வையிட்ட கிம் ஜாங் உன்
Kanimozhi: நிக்காத பஸ்சுக்கு பஸ் ஸ்டாப் எதுக்கு? கனிமொழியை கும்பலாக கேள்வி கேட்ட பெண்கள்
Kanimozhi: நிக்காத பஸ்சுக்கு பஸ் ஸ்டாப் எதுக்கு? கனிமொழியை கும்பலாக கேள்வி கேட்ட பெண்கள்
50 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி! Honda QC1 இ ஸ்கூட்டர் விலை, மைலேஜ் எவ்ளோ?
50 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி! Honda QC1 இ ஸ்கூட்டர் விலை, மைலேஜ் எவ்ளோ?
Embed widget