மேலும் அறிய
Advertisement
(Source: Poll of Polls)
பள்ளிக் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றம்.. 151 புதுப் பணியிடங்கள் உருவாக்கம்- பின்னணி என்ன?
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் கல்வியில் ஆராய்ச்சி இயக்ககத்திற்கு தனித்தனியாக 2 இணை இயக்குனர் பதவி உருவாக்கி அரசாணை வெளியீடு
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்பாடுகளைச் சீரமைத்து மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைத்திட, கல்வி மாவட்ட அளவில் தொடக்கப் பள்ளிகளுக்கென டி.இ.ஓ பணியிடங்களும், மாநில அளவில் தனியார், மெட்ரிகுலேஷன் பள்ளிகளை கண்காணிப்பதற்கு துணை மற்றும் இணை இயக்குனர் பணியிடங்களையும் உருவாக்கி பள்ளிக் கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், அனைத்து வகையான பள்ளிகளின் செயல்பாடுகளையும் மாவட்டக் கல்வி அலுவலர் கவனிப்பதால் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அவர்கள் செலவழிக்கும் நேரம் குறைந்து மாவட்டக் கல்வி அலுவலரால் திறம்பட பணிகளைச் செய்ய முடியவில்லை.
தொடக்கக் கல்விக்கான பிரத்யேக மாவட்ட அளவிலான அலுவலர் இல்லாததால் மாவட்ட அளவில் ஏற்பட்டுள்ள வெற்றிடம், அடிப்படையான கற்பித்தல் கற்றல் செயல்முறையை பாதித்துள்ளது. மறுபுறம், முதன்மை கல்வி அலுவலர்கள், பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் தொடர்பான கடுமையான ஒழுங்குமுறைப் பணிகள் மற்றும் பிற கல்விப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அவர்களாலும் இதற்கென நேரத்தைச் செலவிட முடியவில்லை.
கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மாணவர்களைத் தக்கவைக்கவும், தரமான கல்வியை வழங்கவும், ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் மேலும் ஒரு மாவட்டக் கல்விக்கும் தொடக்கத் துறைக்கான மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கப் பள்ளிக்கென) மூலம் ஒரு பிரத்யேகமான கண்காணிப்பு அமைப்பைக் கள அளவில் வைத்திருப்பது அவசியமென கருதுகிறது. இதுதொடர்பாக 58 மாவட்டக் கல்வி அலுவலர்களை (தொடக்கப் பள்ளிக்காக) உருவாக்குமாறு பள்ளிக் கல்வி ஆணையர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நேரடியாகப் பணியமர்த்தப்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பயிற்சி முடித்தவுடன் மாவட்டக் கல்வி அதிகாரியாக (தொடக்கப் பள்ளி) நியமிக்கப்பட வேண்டும் என ஆணையர் தனது பரிந்துரையில் கூறினார்.
தனியார் பள்ளிகளுக்கென மாவட்டக் கல்வி அலுவலர்
பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாலும், அரசுப் பள்ளிகளுக்கு கல்விப் பயணம் மேற்கொள்வதாலும், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் நேரத்தை ஒதுக்க முடியாமல், உதவி பெறாத பள்ளிகளை திறம்பட ஒழுங்குபடுத்த முடியாமல் போவதாகவும், அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகளுக்கென) தனிப் பணியிடம் உருவாக்க வேண்டுமென கோரியுள்ளார். மேலும், அனைத்து தனியார் பள்ளிகளையும் கவனிக்க ஒரு இணை இயக்குநர் நிலை மற்றும் துணை இயக்குநர் நிலைப் பதவியை உருவாக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர்களின் கற்பித்தல், கற்றல் மற்றும் பணிநிலைப் பயிற்சி ஆகியவற்றில் பல்வேறு செயல்பாடுகளை விரிவுபடுத்துவதால், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் கூடுதல் இணை இயக்குநர் பதவி மற்றும் துணை இயக்குநர் நிலை பதவி உருவாக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கப் பள்ளி) அதிகார வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், தனியார் பள்ளிகளின் இயக்குநரகத்திற்கும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சிலுக்குமென தனித்தனியாக 2 துணை இயக்குநர் பதவிகள் உருவாக்கப்படுகிறது.
32 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், 15 தொகுதிக் கல்வி அலுவலர் பணியிடங்கள், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு 16 தனி உதவியாளர் பதவிகள் உருவாக்கப்படுகிறது. சமக்ரா சிக்ஷாவில் ஏற்கனவே உள்ள 2 இணை இயக்குநர் பதவிகளை மாற்றுவதன் மூலம் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநரகத்தில் தலா ஒரு இணை இயக்குநர் பதவியை உருவாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டக் கல்வி அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை தற்போதைய நிலையில் திருத்துவதற்காக மட்டுமே மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க/ மேல்நிலை / தனியார் பள்ளி) என்ற பெயரிலேயே மாற்றியமைத்து உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் புதிதாக உருவாக்கப்படும் மாவட்ட கல்வி அலுவலர்கள்(தொடக்க/நடுநிலை/தனி யார்) தங்கள் மாவட்ட எல்லைக்குள்ளான பள்ளிகளை ஆய்வு செய்தல், அனுமதி வழங்குதல், அனுமதியை புதுப்பித்தல், ரத்து செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அதிகார வரம்புகள் வழங்கப்படுகிறது’’ என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2024
தேர்தல் 2024
தேர்தல் 2024
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion