மேலும் அறிய

மீண்டும் ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா...!

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநர் ஆர்.என். ரவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநர் ஆர்.என். ரவியிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக,கடந்தாண்டு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நீட் தேர்வுக்கு எதிராக விலக்கு கோரி மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இந்த சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். 

இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களை நீட் தேர்வு காக்கிறது. நீட் தேர்வு சமூக நீதியை உறுதி செய்வதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் விளக்கம் அளித்தது. ஆளுநரின் இந்த நடவடிக்கை தமிழக அரசிற்கும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையின் போது, தமிழக எம்.பிக்கள் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் சபாநாயகர் வெங்கையா நாயுடு அதற்கு அனுமதி தரவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.


மீண்டும் ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா...!

இதைத்தொடர்ந்து இன்று மீண்டும் நீட் மசோதாவை நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடியது. சபா நாயகர் உரையுடன் தொடங்கிய இந்த சிறப்புக்கூட்டத்தில் கூட்டணிக்கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகள் நீட் தேர்வு குறித்தான தங்களது கருத்தை முன்வைத்தனர். ஆனால் பாஜக நீட் விலக்கு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. இறுதியாக பேசிய முதல்வர் ஸ்டாலின், மீண்டும் நிறைவேற்றப்பட்டிருக்கும் நீட் மசோதாவை ஆளுநர் நிச்சயம் குடியரசுத்தலைவருக்கு அனுப்புவார் என்று நம்புவதாக கூறினார். 

ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது மக்களிடம் கருத்து கேட்டு 193 பக்க  அறிக்கையை சமர்பித்தது. நீண்ட பரிசீலனைக்கு பிறகு, நீட் விலக்கு மசோதா இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த நீட் விலக்கு மசோதாவை ஆளுநர், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் 142 நாட்கள் அதை வைத்திருந்து விட்டு, நமக்கே அதை திருப்பி வந்திருக்கிறது. 2, 3 ஆண்டுகள் பணம் செலுத்தி பயிற்சி பெற முடிந்தவர்கள் மட்டுமே நீட்  தேர்வில் நுழைய முடியும் என்பது 21 ஆம் நூற்றாண்டின் மாபெரும் அறிவு தீண்டாமை. நீட் தேர்வு பணக்கார நீதியை பேசுகிறது என்று தெரிவித்திருந்தார். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget