மேலும் அறிய

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தா..? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். 

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். 

பள்ளிக்‌ கல்வித்துறையின்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்‌ மற்றும்‌ பயிற்சி ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள்‌ கோட்டூர்புரம்‌, அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில்‌ நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தொடக்கக் கல்வி இயக்ககம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம், பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சமக்ர சிக்‌ஷா, பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்ந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இந்த முதன்மைக் கல்வி அலுவலர் கூட்டத்தில், 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பேசி இருப்பதாகத் தகவல் வெளியானது.

உளவியல் அழுத்தம், பாதிப்பு

மாணவர்கள் தொடர்ந்து 3 பொதுத் தேர்வுகளை ஆண்டுதோறும் எழுதுவதால் உளவியல் அழுத்தம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், அதனால் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியானது. கொரோனா தொற்று மற்றும் அதைத் தொடர்ந்த ஊரடங்கு ஆகியவற்றால் மாணவர்கள் மத்தியில் கற்றல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 11, 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தின் சுமையைக் குறைப்பது பற்றியும் பள்ளிக் கல்வித்துறை கலந்து ஆலோசித்ததாகக் கூறப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து கல்வியாளர்கள் சங்கமம் என்ற அமைப்பு இணைந்து, 'ஆசிரியர்களுடன் அன்பில்' என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். 

நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், ''பல தனியார் பள்ளிகள் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்காக 11ஆம் வகுப்புப் பாடங்களைக் கற்பிப்பதையே விட்டுவிடுகின்றனர். இதனால் அந்த அடிப்படையே மாணவர்களுக்குத் தெரியாமல் போய்விடுகிறது.

இதனால், நுழைவுத் தேர்வுகளை மாணவர்களை எழுதும்போது அவர்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால்,  11ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை'' என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தா..? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

ஆரம்ப நடைமுறை

ஆரம்பத்தில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மட்டுமே நடைமுறையில் இருந்தது. இந்தப் பொதுத் தேர்வு முடிவுகளில் முந்த  நிலம் முழுவதும் தனியார் பள்ளிகள் இடையே கடும் போட்டி நிலவியது. 11ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தாமல் 12ஆம் வகுப்புப் பாடங்களில் முக்கியத்துவம் செலுத்தியதும் நடந்தது. இதனால்  நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்ற புதிய நடைமுறை, 2017- 18ஆம் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

அதையடுத்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை 1,200-ல் இருந்து 600-ஆகக் குறைக்கப்பட்டது. இரண்டு வகுப்புகளையும் சேர்த்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் முறை அமல்படுத்தப்பட்டது. அந்த மதிப்பெண்களைக் கருத்தில்கொண்டே உயர் கல்வி சேர்க்கை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

திடீரென பிளஸ் 1 வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடைபெறும். ஆனால், அந்த மதிப்பெண் உயர் கல்வி சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இது சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டைத் தவிர்த்து, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட மத்தியக் கல்வி வாரியங்கள் மற்றும் பிற மாநில கல்வி வாரியங்களின் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

*

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில்  9ஆம்  நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி  உலா
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி உலா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில்  9ஆம்  நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி  உலா
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி உலா
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
"இதை மட்டும் பண்ணாதீங்க சிந்தனை திறன் குறையும்" மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அட்வைஸ்!
Australian Open: ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Embed widget